ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2026-ஆம் ஆண்டு சீசன் கடந்த சனிக்கிழமை ஆரம்பமானது. சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) தனது முதல் ஆட்டத்தில் இன்று(மார்ச் 30) ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை குவாஹாட்டியில் சந்தித்தது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே ரன் திரட்ட தடுமாறியதைப் பார்த்த சென்னை அணியின் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர். சிஎஸ்கே வீரர்கள் ஆட்டத்திறனைப் பார்த்ததும், முதல் பாதியிலேயே ஆட்டத்தின் முடிவு ஏறத்தாழ கணிக்கப்பட்டுவிட்டது என்றே சொல்லலாம்.
சிஎஸ்கே நிர்ணயித்த 128 ரன்கள் இலக்கை விரட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடக்க வீரர் யஜஸ்வி செய்ஸ்வால் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும் வைபவ் சூர்யவன்ஷி 17 பந்துகளில் 305 ஸ்ட்ரைக்ரேட்டில் 52 ரன்கள் (5 சிக்ஸர்கள், 4 பௌண்டரிகள்) குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
2 விக்கெட்களை மட்டுமே இழந்து 12.1 ஓவர்களிலேயே 128 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.
இதைத்தொடர்ந்து, சிஎஸ்கே தனது இரண்டாவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வரும் ஏப். 3-ஆம் தேதி சென்னையில் எதிர்கொள்கிறது.
Summary
Rajasthan Royals won by 8 wkts
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; பஞ்சாப் கிங்ஸின் வெற்றியை தடுக்குமா?

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?

முதலிடத்துக்கான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு!

முதல் போட்டியிலேயே சொதப்பிய சிஎஸ்கே; பந்துவீச்சில் அசத்திய ராஜஸ்தான் ராயல்ஸ்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

