ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சென்னை சூப்பர் கிங்ஸ் ஃபீல்டிங் பயிற்சியாளராக இங்கிலாந்து விக்கெட் கீப்பர் நியமனம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் ஃபீல்டிங் பயிற்சியாளராக இங்கிலாந்து முன்னாள் விக்கெட் கீப்பர் நியமிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

News image
Updated On :17 மார்ச் 2026, 10:27 am IST

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக இங்கிலாந்து முன்னாள் விக்கெட் கீப்பர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 19-வது தொடர் வருகிற 28 ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் திடலில் தொடங்குகிறது. கோலகலமாகத் தொடங்கும் இந்தத் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பெங்களூரு அணியும் முன்னாள் சாம்பியன் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.

ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் சரியாக அமையவில்லை. 14 போட்டிகளில் விளையாடிய சென்னை அணி, நான்கு வெற்றிகளை மட்டுமே பெற்று, எட்டு புள்ளிகளும் 10-வது இடத்தைப் பிடித்தது. இதனால், அதிரடி பேட்டிங் வரிசையுடன் ஆறாவது கோப்பையை வெல்லும் முனைப்பில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் மார்ச் 30 ஆம் தேதி நடைபெறும் தங்களுக்கான முதல் போட்டியில் பெங்களூரு அணியையும், சென்னை மண்ணில் நடைபெறும் தங்களுக்கான முதல் போட்டியில் ஏப். 4 ஆம் தேதி பஞ்சாப் அணியையும் சிஎஸ்கே அணி எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், சென்னை அணியின் புதிய ஃபீல்டிங் பயிற்சியாளராக இங்கிலாந்து அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்டர் ஜேம்ஸ் ஃபாஸ்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.

45 வயதான ஃபாஸ்டர், நீண்டகால தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங், பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் எரிக் சைமன்ஸ் ஆகியோருடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக சென்னை அணி நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

இங்கிலாந்து அணிக்காக 2001 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஏழு டெஸ்ட், 11 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் ஃபாஸ்டர் விளையாடியுள்ளார்.

சிஎஸ்கே-வில் சேர்வதற்கு முன்பு, ஃபாஸ்டர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் உதவி மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார்.

ஐஎல்டி20 தொடரில் டெசர்ட் வைப்பர்ஸ், தி ஹன்ட்ரட் தொடரில் நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ் மற்றும் பிஎஸ்எல்லில் பெஷாவர் சல்மி ஆகிய அணிகளுக்கும் பயிற்சியாளர் பொறுப்புகளை வகித்துள்ளார்.

வரவிருக்கும் தி ஹன்ட்ரட் தொடருக்காக, அவர் சமீபத்தில் பர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

Chennai Super Kings have appointed former England wicketkeeper-batter James Foster as their new fielding coach ahead of IPL 2026, adding an experienced coach to Stephen Fleming's support staff.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.