விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: 12-ஆவது முறையாக முதலிடம் பிடித்த ஜோ ரூட்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்த ஜோ ரூட் குறித்து...

News image

ஐசிசி போஸ்டர், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஜோ ரூட். - படங்கள்: ஐசிசி, ஏபி

Updated On :4 மணி நேரங்கள் முன்பு

இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் (38 வயது) ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். இத்துடன் பன்னிரண்டாவது முறையாக டெஸ்ட்டில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 253 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட்ட ஜோ ரூட் முதல் இன்னிங்ஸில் 46 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 77 ரன்களும் எடுத்தார்.

இந்தப் போட்டியில் மொத்தமாக 123 ரன்கள் எடுத்ததன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் 14 ஆயிரம் ரன்களைக் கடந்து ஜோ ரூட் சாதனைப் படைத்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் ஜோ ரூட், இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இங்கிலாந்து அணிக்காக 165 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட், 14, 075 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 67 அரைசதங்கள் மற்றும் 41 சதங்கள் அடங்கும். இந்த அபார பேட்டிங்கினால் ஐசிசி தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

ஐசிசி டெஸ்ட் பேட்டர்கள் தரவரிசை

1. ஜோ ரூட் - 871 புள்ளிகள் (இங்கிலாந்து)

2. ஹாரி ப்ரூக் - 866 புள்ளிகள் (இங்கிலாந்து)

3. டிராவிஸ் ஹெட் - 853 புள்ளிகள் (ஆஸி.)

4. ஸ்டீவ் ஸ்மித் - 831 புள்ளிகள் (ஆஸி.)

5. கமிந்து மெண்டிஸ் - 781 புள்ளிகள் (இலங்கை)

Summary

Joe Root is the no.1 Test Batter in the ICC Men’s Test Player Rankings for the 12th time

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.