பருவநிலை மாற்றங்கள் காரணமாக அடுத்தாண்டு முதல் ஐபிஎல் போட்டிகளை முன்கூட்டியே நடத்த திட்டமிடப்பட்டு வருவதாக பிசிசிஐ செயலர் தேவஜித் சாய்கியா வியாழக்கிழமை (ஜூன் 18) தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகள் மார்ச் மாத இறுதியில் தொடங்கப்படுவதால் போட்டிகள் முடியும் கட்டத்தில், அதாவது மே மாத இறுதியில் வானிலை சற்று மோசமாக மாறுகிறது. இதனால் சில ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்படுகிறது.
இதுகுறித்து பிசிசிஐ செயலர் தேவஜித் சாய்கியா பேசியதாவது:
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச் 29 ஆம் தேதி தொடங்கி, மே 31 ஆம் தேதிக்குள் முடிவடைந்தது. அதில் உள்ள பிரச்னை என்னவென்றால், மே 15 ஆம் தேதிக்குப் பிறகு, வானிலை தொடர்பான சிக்கல்கள் ஏற்படுகிறது.
ஒருபுறம் சில பகுதிகளில் மழை பெய்யும் என்ற அச்சம் நிலவுகிறது. மறுபுறம் சில பகுதிகளில் வெப்பம் அதிகமாக நிலவுகிறது. இவை விளையாடும் வீரர்களுக்கோ அல்லது பார்க்கும் ரசிகற்களுக்கோ சாதகமாக இல்லை.
எனவே, அடுத்தாண்டு முதல் ஐபிஎல் போட்டிகளை மார்ச் மாத இறுதிக்கு முன்பாகவே தொடங்க முடியுமா என்பது குறித்து பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகக் குழுக்களிடையே ஒரு விவாதம் நடைபெற்று வருகிறது.
மேலும், 2027 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முந்தைய நாள்களில் மோசமான வானிலை நிலவாமல் இருப்பதற்காக, மார்ச் 10 ஆம் தேதிக்குள் தொடரைத் தொடங்கி, மே 15 ஆம் தேதிக்குள் அதை நிறைவு செய்ய முடியுமா என்பதற்கான சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்று தேவஜித் சாய்கியா தெரிவித்தார்.
Summary
BCCI Secretary Devajit Saikia stated on Thursday (June 18) that there are plans to hold IPL matches earlier starting next year due to climate changes.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐபிஎல் போட்டிகள் 74-லிருந்து 94-ஆக உயர்த்தப்படுமா? பிசிசிஐ விளக்கம்!

ஐபிஎல் வரலாற்றில் அதிகம் பார்க்கப்பட்ட போட்டி எது தெரியுமா?
ஐபிஎல் இறுதிப்போட்டி சின்னசாமி திடலில் கிடையாது! ஏன்?

ஜேமிசனுக்கு அபராதம், விராட் கோலிக்கு இல்லை..! பாரபட்சமாக நடந்துகொள்ளும் பிசிசிஐ?
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

