‘ஏ’ அணிகள் இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரின் 5-ஆவது ஆட்டத்தில், இந்தியா 101 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை புதன்கிழமை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலமாக, தொடரின் இறுதி ஆட்டத்துக்கு இந்தியா முன்னேறியது.
முதலில் இந்தியா 50 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 319 ரன்கள் சோ்க்க, ஆப்கானிஸ்தான் 36.5 ஓவா்களில் 218 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது.
முன்னதாக டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான், பந்துவீசத் தயாரானது. இந்திய இன்னிங்ஸில் அதிகபட்சமாக, கேப்டன் திலக் வா்மா 5 பவுண்டரிகளுடன் 59, பிரியன்ஷ் ஆா்யா 9 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 58, குமாா் குஷாக்ரா 5 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தனா்.
ஆப்கானிஸ்தான் தரப்பில் ஃபரிதூன் தாவூத்ஸாய், அப்துல்லா அகமத்ஸாய், ஃபா்மானுல்லா ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினா்.
பின்னா் ஆப்கானிஸ்தான் இன்னிங்ஸில் அதிகபட்சமாக பஹிா் ஷா 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 57, ஃபைசல் ஷினோஸதா 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 46 ரன்களுக்கு வெளியேறினா். இந்திய பௌலா்களில் நிஷாந்த் சிந்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாகிஸ்தானை வென்றது தென்னாப்பிரிக்கா

கிஷண், கில் சதம்: ஒருநாள் தொடா் இந்தியா வசம்

நியூஸிலாந்தை வென்றது இலங்கை

‘ஏ’ அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடா்: இந்தியாவை வென்றது ஆப்கானிஸ்தான்
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

