சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

19.5ஆவது பந்தில் த்ரில் வெற்றி: கண்ணீர் விட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீராங்கனை!

மகளிர் டி20 உலகக் கோப்பையின் நான்காவது போட்டி குறித்து...

News image

ஆனந்தக் கண்ணீர் வடித்த ஷெமைன் கேம்பெல். - படம்: ஐசிசி

Updated On :5 மணி நேரங்கள் முன்பு

மகளிர் டி20 உலகக் கோப்பையின் நான்காவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

சௌதாம்டனில் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் தொடக்க வீராங்கனை ஜார்ஜியா பிளிம்மர் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.

நிதானமாக விளையாடிய மற்றிமொரு தொடக்க வீராங்கனை இசபெல்லா கேஸ் 38 ரன்கள் குவித்தார். இந்த அணியில் அதிகபட்சமாக ப்ரூக் ஹாலி டே 40 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்களில் இந்த அணி 162/6 ரன்கள் எடுத்தது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் ஆலியா அல்லீன் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அடுத்து விளையாடிய மே.இ.தீ. அணி 19.5 ஓவர்களில் 163/3 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி கண்டது.

இந்த அணியில் அதிகபட்சமாக ஷெமைன் கேம்ப்பெல் 90 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். போட்டிக்குப் பிறகு இவர் கண்ணீர் விட்டது சமூக வலைதளத்தில் கவனம் பெற்றது.

இந்தக் கடினமான ஆடுகளத்தில் சிறப்பாக விளையாடிய ஷெமைன் கேம்ப்பெல் ஆட்ட நாயகி விருது வென்றார்.

Summary

ICC Women's T20 World Cup 2026 West Indies Women won by 7 wkts Shemaine Campbelle woman of the match

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.