நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரும், சர்வதேச போட்டிகளில் அணிக்காக அதிக ரன்கள் குவித்தவருமான வில்லியம்சன், 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமானார்.
முன்னாள் கேப்டனான வில்லியம்சன், தேசிய அணிக்காக 378 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி, 48 சதங்கள் மற்றும் ஆறு இரட்டைச் சதங்களுடன்19,346 ரன்களைக் குவித்துள்ளார்.
அதில், 93 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 18 அரைசதங்களுடன் 2575 ரன்களும், 175 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 15 சதங்கள், 47 அரைசதங்களுடன் 7256 ரன்களும், 110 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 33 சதங்கள் மற்றும் 38 அரைசதங்களுடன் 9,515 ரன்களும் குவித்துள்ளார்.
இவரது தலைமையில், 3 முறை நியூசிலாந்து அணி, டி20 உலகக் கோப்பையில் பங்கேற்றுள்ளது. அவரது தலைமையின் கீழ், நியூசிலாந்து அணி இரண்டு ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளுக்கும், மூன்று ஐசிசி அரையிறுதிப் போட்டிகளுக்கும் தகுதி பெற்றது.
2016 ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணியை அரையிறுதி வரை அணியை அழைத்துச் சென்றிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, 2021ஆம் ஆண்டில் இறுதிப்போட்டி வரை நியூசிலாந்து அணி முன்னேறியது. ஆனால், ஆஸ்திரேலிய அணி வென்றது. அடுத்து, 2022 ஆம் ஆண்டிலும் நியூசிலாந்து அணியை அரையிறுக்கு அழைத்துச் சென்றார் வில்லியம்சன்.
அதுமட்டுமின்றி, 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையையும் கைப்பற்றியது. அவர் 2015 ஆம் ஆண்டில் ஐசிசி ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராகவும், 2019 ஆம் ஆண்டில் ஐசிசி ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2024 ஆம் ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு, வில்லியம்சன் ஒரு டி20 போட்டிகூட விளையாடவில்லை. இதனால், 2025 ஆம் ஆண்டு நவ. 2 ஆம் தேதி டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து, ஐபில், பிபிஎல் போன்ற தொடர்களில் விளையாடிவந்த வில்லியம்சன், ஐபிஎல் தொடரில் லக்னௌ அணியின் ஆலோசகராகவும் பணியாற்றினார். ஐபிஎல்லில் இவரது தலைமையிலான ஹைதராபாத் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றிருந்தார்.
பேப்-4 (Fab Four) என கிரிக்கெட் ரசிகர்களால் அழைக்கப்படும் விராட் கோலி, வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட் ஆகிய நால்வரில் வில்லியம்சன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து திடீரென ஓய்வு பெற்றதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைத்துள்ளனர்.
டெஸ்ட், டி20 போட்டிகளிலிருந்து விராட் கோலியும், ஒருநாள் போட்டிகளிலிருந்து ஸ்டீவ் ஸ்மித்தும் ஏற்கனவே ஓய்வு பெற்ற நிலையில் வில்லியம்சனும் தற்போது ஓய்வை அறிவித்துள்ளார். இங்கிலாந்து வீரர் ரூட் மட்டுமே தற்போது மூன்று வகையான போட்டிகளிலும் விளையாடி வருகிறார்.
Summary
New Zealand stalwart Kane Williamson has announced his retirement from international cricket with immediate effect, bringing the curtains down on a stellar career spanning nearly 16 years and 378 matches across formats.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேன் வில்லியம்சனுக்குப் பதிலாக டெஸ்ட் அணியில் மாற்று வீரர் சேர்ப்பு!

கேன் வில்லியம்சன் ஓய்வு; வைரலாகும் விராட் கோலியின் பதிவு!

நியூசி.க்கு எதிராக இங்கிலாந்து அபார வெற்றி; மீண்டும் எழுச்சி பெறுகிறதா பேஸ்பால் யுக்தி?

லார்ட்ஸ் டெஸ்ட்: ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்திய ராபின்சன்..! நியூசிலாந்து தடுமாற்றம்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி
தினமணி செய்திச் சேவை

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
