வங்கதேசம் - ஆஸ்திரேலியா போட்டியில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வந்தது.
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஒரு ரன் கூட எடுக்காமலே 3 விக்கெட்டுகளை இழந்து அதன் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மேத்யூ ஷார்ட், கூப்பர் கானலி, மாட் ரென்ஷா ஆகியோர் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்கள். வங்கதேச அணி சார்பில் முஷ்தஃபிகுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி வருகிறார்.
தற்போது, ஆஸ்திரேலிய அணி 42 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக மார்னஸ் லபுஷேன் 55* ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்கிறார்.
சிறப்பாக விளையாடிய பந்துவீச்சாளர் சேவியர் பார்லெட் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தற்போது, களத்தில் லபுஷேன், நாதன் எல்லீஸ் இருக்கிறார்கள்.
ஏற்கெனவே, முதல் போட்டியில் தோல்வியுற்றுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு இந்தப் போட்டி மிக முக்கியமானது. இதில் தோல்வியுற்றால் தொடரை இழக்கும் அபாயம் இருக்கிறது.
முன்னதாக பாகிஸ்தானிடம் ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா இழந்ததும் குறிப்பிடத்தக்கது. அடுத்தாண்டு நடைபெறும் உலகக் கோப்பைக்கான தயாராகுவதில் நடப்பு சாம்பியனான ஆஸி. அணி பின்னடைவைச் சந்தித்துள்ளதும் கவனம் பெறுகிறது.
Labuschagne's half-century: Rain interrupts Bangladesh vs. Australia match!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வங்கதேச சுற்றுப் பயணம்: ஒருநாள் தொடரை இழந்த ஆஸி.க்கு டி20யில் முதல் வெற்றி!

ஆடம் ஸாம்பா, ஜோயல் டேவிஸ் தலா 3 விக்கெட்டுகள்: 131 ரன்களுக்கு ஆட்டமிழந்த வங்கதேசம்!

மூவர் அரைசதம் விளாசல்; ஒருநாள் தொடரை முழுமையாகக் கைப்பற்றுமா வங்கதேசம்?

பூஜ்ய ரன்னுக்கே 3 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா..! மிரட்டும் வங்கதேசம்!
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
இணையதளச் செய்திப் பிரிவு
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu
இணையதளச் செய்திப் பிரிவு

