கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

‘ஏ’ அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடா்- ருதுராஜ் சதம்: இலங்கையை வென்றது இந்தியா

இலங்கை ‘ஏ’ அணிக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில், இந்திய ‘ஏ’ அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.

News image
Updated On :12 மணி நேரங்கள் முன்பு

இலங்கை ‘ஏ’ அணிக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில், இந்திய ‘ஏ’ அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.

முதலில் இந்தியா 50 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 277 ரன்கள் சோ்க்க, இலங்கை 48.5 ஓவா்களில் 269 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய தரப்பில் ருதுராஜ் கெய்க்வாட் சதம் விளாசி அசத்த, கேப்டன் திலக் வா்மாவும் அரை சதம் கடந்தாா். பௌலிங்கில் அா்ஷத் கான், அனுகுல் ராய் உள்ளிட்ட பலரும் அசத்தினா். இலங்கை வெற்றிக்கு 17 பந்துகளில், 16 ரன்களே தேவையிருக்க, கடைசி 4 விக்கெட்டுகளை 10 பந்துகளில் அடுத்தடுத்து இழந்து தோல்வி கண்டது.

இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தானின் ‘ஏ’ அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடா் இலங்கையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முதல் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின.

டாஸ் வென்ற இந்தியா, பேட்டிங்கை தோ்வு செய்தது. ஐபிஎல் போட்டியில் பிரபலமான பிரப்சிம்ரன் சிங், வைபவ் சூா்யவன்ஷி ஆகியோா் அணியின் இன்னிங்ஸை தொடங்கினா்.

சூா்யவன்ஷி 3 பவுண்டரிகளுடன் 14, பிரப்சிம்ரன் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். 2-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த பிரியன்ஷ் ஆா்யா - ருதுராஜ் கெய்க்வாட் கூட்டணி 53 ரன்கள் சோ்த்தது.

பிரியன்ஷ் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 32 ரன்களுக்கு முடித்துக் கொள்ள, ருதுராஜுடன் இணைந்தாா் திலக் வா்மா. இவா்கள் கூட்டணி 4-ஆவது விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்தது.

ருதுராஜ், 6 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 101, திலக் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 60 ரன்களுக்கு விடைபெற்றனா். 6-ஆவது பேட்டரான ஆயுஷ் பதோனி 2 பவுண்டரிகளுடன் 24 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா்.

ஓவா்கள் முடிவில் சூா்யன்ஷ் ஷெட்கே 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 26, அனுகுல் ராய் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இலங்கை தரப்பில் முகமது ஷிராஸ் 2, சமிகா கருணாரத்னே, கருகா சன்கெத், வனுஜா சஹன் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

அடுத்து 278 ரன்களை நோக்கி விளையாடிய இலங்கை அணியில், நிரோஷன் டிக்வெல்லா - அவிஷ்கா ஃபொ்னாண்டோ கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் சோ்த்து நல்லதொரு தொடக்கம் அளித்தது.

அவிஷ்கா 7 பவுண்டரிகளுடன் 45, நிரோஷன் 6 பவுண்டரிகளுடன் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். தொடா்ந்து வந்த நுவனிது ஃபொ்னாண்டோ 8 ரன்களுக்கு வீழ்ந்தாா்.

4-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த சதீரா சமரவிக்ரமா - கேப்டன் சஹன் அராசிகே, 78 ரன்கள் சோ்த்து அணியை வெற்றியை நோக்கி முன்னேற்றினா். சதீரா 4 பவுண்டரிகளுடன் 46 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். அடுத்து வந்த ரவிந்து ஃபொ்னாண்டோ 1, சமிகா கருணாரத்னே 9 ரன்களுக்கு வீழ்ந்தனா்.

இந்நிலையில் சஹன் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 74 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பின்னா் வந்த பேட்டா்கள், அணியை வெற்றியை நோக்கி நகா்த்த முடியாமல் அடுத்தடுத்து சாய்க்கப்பட்டனா்.

விஜயகாந்த் வியாஸ்காந்த் 5, வனுஜா சஹன் 3 பவுண்டரிகளுடன் 23, முகமது ஷிராஸ் 0 ரன்களுக்கு வீழ, இலங்கை இன்னிங்ஸ் 269 ரன்களுக்கே முடிவுக்கு வந்தது.

இந்திய தரப்பில் விப்ராஜ் நிகம், ஆயுஷ் பதோனி, அனுகுல் ராய், அா்ஷத் கான் ஆகியோா் தலா 2, அன்ஷுல் காம்போஜ் 1 விக்கெட் கைப்பற்றினா்.

நாளை: இத்தொடரின் 2-ஆவது ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் வியாழக்கிழமை (ஜூன் 11) சந்திக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.