பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

இந்தியாவுடனான மகளிர் டி20: தொடரை வென்றது இங்கிலாந்து

News image
Updated On :4 ஜூன் 2026, 5:24 am IST

இந்திய மகளிர் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி, தொடரை 2-1 என கைப்பற்றியது.

இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் சேர்க்க, இங்கிலாந்து 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 184 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

82 ரன்கள் விளாசி "ஆட்டநாயகி' ஆன இங்கிலாந்தின் ஆலிஸ் கேப்சி, 3 ஆட்டங்களிலுமாக 116 ரன்கள் அடித்ததற்காக தொடர்நாயகி விருதையும் தட்டிச் சென்றார்.

முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து, ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இந்தியா பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தனா 8, ஷஃபாலி வர்மா 11, யஸ்திகா பாட்டியா 7 பவுண்டரிகளுடன் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

ஜெமிமா ரோட்ரிக்ஸ் 4 பவுண்டரிகளுடன் 29, தீப்தி சர்மா 3 பவுண்டரிகளுடன் 32 ரன்களுக்கு வெளியேறினர். ஓவர்கள் முடிவில் கேப்டன் ஹர்மன்பிரீத் கெüர் 7 பவுண்டரிகளுடன் 56, ரிச்சா கோஷ் 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இங்கிலாந்து தரப்பில் லாரென் பெல் 2, லின்சே ஸ்மித், சார்லி டீன் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து 181 ரன்களை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியில், சோஃபியா டங்க்லி 16, டேனி வியாட் 5, எமி ஜோன்ஸ் 2 ரன்களுக்கு பெவிலியன்

திரும்பினர்.

ஆலிஸ் கேப்சி 9 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 82 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, ஹீதர் நைட் 10 பவுண்டரிகளுடன் 70, ஃப்ரெயா கெம்ப் 2 ரன்களுடன் அணியை வெற்றிபெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்திய பெüலர்களில் அருந்ததி ரெட்டி, கிராந்தி கெüட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.