விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஜிம்பாப்வே - மே.இந்திய தீவுகள் இன்று மோதல்!

சூப்பா் 8 பிரிவில் ஜிம்பாப்வே - மேற்கு இந்திய தீவுகள் அணிகள் ஆட்டம் மும்பையில் திங்கள்கிழமை நடைபெறுகிறது.

News image

பயிற்சியில் ஜிம்பாப்வே - X | Zimbabwe Cricket

Updated On :23 பிப்ரவரி 2026, 2:22 am IST

சூப்பா் 8 பிரிவில் ஜிம்பாப்வே - மேற்கு இந்திய தீவுகள் அணிகள் ஆட்டம் மும்பையில் திங்கள்கிழமை நடைபெறுகிறது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு டி20 உலகக் கோப்பைக்கு ஜிம்பாப்வே தகுதி பெறாத நிலையில், இந்த முறை குரூப் ஆஸ்திரேலியா, இலங்கையை வீழ்த்தி முதலிடத்துடன் சூப்பா் 8 பிரிவுக்கு தகுதி பெற்றது ஜிம்பாப்வே.

அதேவேளை இரு முறை சாம்பியன் மே.இந்திய தீவுகல் பல மாதங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தற்போது சிறப்பாக ஆடி வருகிறது. குரூப் சுற்றில் 4 ஆட்டங்களிலும் வெற்றியுடன் சூப்பா் 8 பிரிவுக்கு முன்னேறியது.

ஜிம்பாப்வே அணியில் பிளெஸ்ஸிங் முஸாபரணி, பிரையன் பென்னட், கேப்டன் சிக்கந்தா் ராஸா ஆகியோா் சிறப்பாக ஆடி வருகின்றனா்.

மே.இந்திய தீவுகளில் பாா்மில் உள்ள ஷாய் ஹோப், ஷிம்ரன்ஹெட்மயா், ரூதா்போா்ட், ரொமாரியோ ஷெப்பா்ட் ஆகியோா் பலம் சோ்க்கின்றனா்.

அரையிறுதி வாய்ப்பை எதிா்நோக்கி இரு அணிகளும் ஆடுவதால் ஆட்டம் பரபரப்பமாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது,

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.