மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

எங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!

இந்த சீசனில் முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் பேசியிருப்பதாவது...

News image

டாஸின் போது ராஜஸ்தான் அணியின் கேப்டனுடன் பஞ்சாப் கேப்டன். - ANI

Updated On :29 ஏப்ரல் 2026, 4:03 pm IST

நடப்பு ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணி தனது முதல் தோல்வியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் சந்தித்துள்ளது. இது குறித்து கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், “எங்களது திட்டங்களைச் சரியாக செய்து முடிக்கவில்லை” எனக் கூறினார்.

நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 222/4 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.2 ஓவர்களில் 228/4 ரன்கள் எடுத்து வென்றது.

இந்தப் போட்டியில் சிறப்பாக பேட்டிங் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டர் டோனவன் ஃபெரேரா ஆட்ட நாயகன் விருது வென்றார். இந்த சீசனில் முதல் தோல்வியைச் சந்தித்த பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறியிருப்பதாவது:

224 ரன்கள் என்பது மிகவும் அற்பிதமான இலக்கு என நினைக்கிறேன். இந்த மாதிரியான மெதுவான, கணிக்க முடியாத ஆடுகளத்தில் சிறப்பாக விளையாடிய பேட்டர்களுக்கு வாழ்த்துகள்.

நாங்கள் பந்துவீச்சில் சிறிது பின் தங்கிவிட்டோம். நினைத்ததை சரியாக செய்ய முடியவில்லை என நினைக்கிறேன். அதிகமாக வேகமில்லாத மெதுவான பந்துகள், யார்க்கர்கள் வீச நினைத்தோம். அதில் நாங்கள் சரியாக செயல்படவில்லை என நினைக்கிறேன்.

ராஜஸ்தான் அணியினர் மிடில் ஓவர்களில் சிறப்பாக ஆடினார்கள். குறிப்பாக, டோனவன் ஃபெரேரா, ஷுபம் துபே முக்கியமான ரன்களை இறுதி நேரத்தில் அடித்து அசத்தினார்கள்.

டி20யில் பேட்டர்கள் முதல் பந்தில் இருந்தே அடிக்க வருவார்கள். அதனால், பந்துவீச்சாளர்கள் முன்கூட்டியே திட்டங்களுடன் வரும் அளவுக்கு அதிகமான வேலை இருக்கிறது.

இறுதியில் நமது திட்டத்தை சரியாக செயல்படுத்த வேண்டும். அதைச் செய்பவர்கள் வெற்றி பெறுவார்கள். இன்று எங்களுக்கான நாளாக அமையவில்லை என்றார்.

Summary

Where did it go wrong? Punjab Kings captain Shreyas Iyer

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.