ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் நான்ரே பர்கருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போட்டிக்கான ஊதியத்தில் இருந்து 10 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு லக்னௌவில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 159/6 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 18 ஓவர்களில் 119 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய நான்ரே பர்கர் 4 ஓவர்களில் 27 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
லக்னௌ அணியின் கேப்டன் ரிஷப் பந்த் விக்கெட்டை எடுத்த உற்சாகத்தில், ரிஷப் பந்த்தைப் பார்த்து மோசமான வார்த்தைகளை உபயோகப்படுத்தியதும் தவறான செய்கையைக் காண்பித்தார்.
இந்தக் காரணத்தினால், 30 வயதான நான்ரே பர்கருக்கு ஐபிஎல் நடத்தை விதி மீறல் 2.5ன் படி போட்டிக்கான ஊதியத்தில் இருந்து 10 சதவிகிதம் அபராதமும் ஒரு அபராத புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.
குறைவான ரன்களை இலக்காக நிர்ணயித்தும் 40 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ராஜஸ்தான் அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறது.
Summary
RR pacer Burger fined for breaching IPL code of conduct.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தடுமாறும் ராஜஸ்தான் ராயல்ஸ்; வெற்றியை தொடரும் முனைப்பில் குஜராத் டைட்டன்ஸ்!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்படுவதாக அறிவிப்பு!

ரியான் பராக், டோனோவன் ஃபெரைரா அதிரடி; தில்லி கேபிடல்ஸுக்கு 226 ரன்கள் இலக்கு!

தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் மிட்செல் ஸ்டார்க்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

