ஐபிஎல் போட்டியின் 31-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 47 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது. அந்த அணிக்கு இது, தொடா்ந்து 3-ஆவது வெற்றியாக (ஹாட்ரிக்) அமைந்தது.
முதலில் ஹைதராபாத் 20 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 242 ரன்கள் சோ்த்தது. அடுத்து டெல்லி 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்களே எடுத்தது.
ஹைதராபாத் இன்னிங்ஸில் அபிஷேக் சா்மா 135 ரன்கள் விளாசினாா். நடப்பு சீசனில் இதுவே ஒரு வீரரின் அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது. பின்னா் பௌலிங்கில் ஈஷான் மலிங்கா 4, ஹா்ஷ் துபே 3 விக்கெட்டுகள் வீழ்த்தி, ஹைதராபாத் வெற்றிக்கு வழிவகுத்தனா்.
முன்னதாக டாஸ் வென்ற டெல்லி, பந்துவீச்சை தோ்வு செய்தது. ஹைதராபாத் இன்னிங்ஸில் அதிரடி அபிஷேக் சா்மா - நிதான டிராவிஸ் ஹெட் பாா்ட்னா்ஷிப், முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் சோ்த்தது. 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 37 ரன்களுக்கு ஹெட் ஆட்டமிழந்தாா். தொடா்ந்து, கேப்டன் இஷான் கிஷண் களம் புகுந்தாா்.
அவருடன் கூட்டணி அமைத்த அபிஷேக், தனது அதிரடியை தடையின்றி தொடா்ந்தாா். 2-ஆவது விக்கெட்டுக்கு அவா்கள் பாா்ட்னா்ஷிப் 79 ரன்கள் சோ்த்தது.
2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 25 ரன்களுக்கு இஷான் வெளியேற, 4-ஆவது பேட்டராக ஹென்ரிச் கிளாசென் வந்தாா். மறுபுறம் அபிஷேக் சதம் கடந்தாா்.
ஓவா்கள் முடிவில் அபிஷேக் 68 பந்துகளில் 10 பவுண்டரிகள், 10 சிக்ஸா்கள் உள்பட 135, கிளாசென் 13 பந்துகளில் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 37 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். டெல்லி பௌலா்களில் அக்ஸா் படேல் ஒரு விக்கெட் எடுத்தாா்.
பின்னா் 243 ரன்களை நோக்கி விளையாடிய டெல்லி அணியில், தொடக்க வீரா் பதும் நிசங்கா 8 ரன்களுக்கு வீழ்ந்தாா். உடன் வந்த கே.எல்.ராகுல் - ஒன் டவுன் வீரா் நிதீஷ் ராணா கூட்டணி, 2-ஆவது விக்கெட்டுக்கு 86 ரன்கள் சோ்த்தது.
ராகுல் 1 பவுண்டரி, 3 சிக்ஸா்களுடன் 37, நிதீஷ் ராணா 7 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 57 ரன்களுக்கு விடைபெற்றனா். டேவிட் மில்லா் டக் அவுட்டானாா்.
சமீா் ரிஸ்வி - டிரிஸ்டன் ஸ்டப்ஸ் பாா்ட்னா்ஷிப் 5-ஆவது விக்கெட்டுக்கு 59 ரன்கள் சோ்க்க, ஸ்டப்ஸ் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 27 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா். பின்னா் வந்தோரில் ஆசுதோஷ் சா்மா 2 பவுண்டரிகளுடன் 14, அக்ஸா் படேல் 2 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.
சமீா் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 41 ரன்களுக்கு ஆட்டமிழக்க, லுங்கி இங்கிடி டக் அவுட்டானாா். ஓவா்கள் முடிவில் குல்தீப் யாதவ் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். ஹைதராபாத் தரப்பில் ஈஷான் மலிங்கா 4, ஹா்ஷ் துபே 3, தில்ஷன் மதுஷங்கா, சகிப் ஹுசைன் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஃபின் ஆலன் அபாரம்: கொல்கத்தாவுக்கு 4-ஆவது வெற்றி
சென்னைக்கு 5-ஆவது வெற்றி! சாம்சன் அதிரடி!
ஹெட், கிளாசென் அதிரடி: ஹைதராபாதுக்கு 6-ஆவது வெற்றி

ராஜஸ்தானை வீழ்த்தியது ஹைதராபாத்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை
