மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பாட் கம்மின்ஸ் வந்தாலும் இஷான் கிஷனே கேப்டனாக தொடர வேண்டும்: சஞ்சய் பங்கார்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் பாட் கம்மின்ஸ் விளையாடத் தொடங்கினாலும், அணியை இஷான் கிஷனே கேப்டனாக வழிநடத்த வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

News image

கேப்டன் இஷான் கிஷன் - படம் | AP

Updated On :22 ஏப்ரல் 2026, 1:24 pm IST

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் பாட் கம்மின்ஸ் விளையாடத் தொடங்கினாலும், அணியை இஷான் கிஷனே கேப்டனாக வழிநடத்த வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் பங்கார் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத், 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில், சன்ரைசர்ஸ் அணியில் பாட் கம்மின்ஸ் இணைந்த பிறகும் அணியை இஷான் கிஷனே கேப்டனாக வழிநடத்த வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் பங்கார் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை இஷான் கிஷன் கேப்டனாக நன்றாக வழிநடத்துகிறார். பந்துவீச்சாளர்களை அவர் நன்றாக பயன்படுத்துகிறார். அதனால், ஆட்டத்தினை ஹைதராபாத் அணி அவர்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடிகிறது. அவர் அவசரகதியாக எந்தவொரு முடிவையும் எடுக்காமல், சரியான முடிவுகளை எடுக்கிறார்.

தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் அவர் சுழற்பந்துவீச்சாளர்களை மிகவும் நன்றாக பயன்படுத்தினார். காயத்திலிருந்து குணமடைந்து அணியில் இணைந்துள்ள பாட் கம்மின்ஸ் பிளேயிங் லெவனில் விளையாடினாலும், அணியை இஷான் கிஷனே கேப்டனாக வழிநடத்த வேண்டும் எனக் கூறுவேன். காயத்திலிருந்து குணமடைந்து மீண்டு வந்துள்ளதால் கம்மின்ஸ் எந்த அளவுக்கு உடல்தகுதியுடன் இருக்கிறார் எனக் கூற முடியாது.

இஷான் கிஷன் கேப்டனாக தொடர்ந்தால், வீரர்கள் தொடர்ச்சியாக ஒரு கேப்டனின் வழிகாட்டுதலில் விளையாடும் தொடர்ச்சி இருக்கும். ஹைதராபாத் அணி நிர்வாகம் அதனை உறுதி செய்ய வேண்டும் என்றார்.

Summary

A former Indian cricketer has stated that even though Pat Cummins has started playing for Sunrisers Hyderabad, Ishan Kishan should be the one to lead the team as captain.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.