சிஎஸ்கே அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சன் (30 வயது) ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு வந்தடைந்தார். இந்தியாவுக்கு வந்த அவர் சிஎஸ்கே அணியில் இணைந்துள்ளார்.
ஆஸ்திரேலிய வீரர் நாதன் எல்லீஸுக்குப் பதிலாக மாற்று வீரராக அதே நாட்டைச் சேர்ந்த ஸ்பென்சர் ஜான்சன் தேர்வாகியுள்ளார். சிஎஸ்கே அணி அடுத்த போட்டியில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக விளையாடுகிறது.
சிஎஸ்கே அணி ஐந்து முறை கோப்பை வென்றாலும் தோனி கேப்டன்சியில் இருந்து விலகிய பிறகு கடந்த மூன்றாண்டுகளாகத் தடுமாறி வருகிறது. கேப்டன் ருதுராஜ், பயிற்சியாளர் பிளெமிங் செயல்பாடுகள் மீது விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.
தற்போதைய சீசனில் 2 போட்டிகளில் மட்டுமே வென்ற சிஎஸ்கே அணி புள்ளிப் பட்டியலில் 8ஆவது இடத்தில் இருக்கிறது. அடுத்த போட்டியில் ஏப்.23ஆம் தேதி மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக வான்கடேவில் மோதுகிறது.
காயத்தில் இருந்த ஸ்பென்சர் ஜான்சன் குணமாகியுள்ளதால், அவர் சிஎஸ்கே அணியுடன் இணைந்துள்ளார். அவர் பந்துவீசும் விடியோவை சிஎஸ்கே வெளியிட்டுள்ளது. மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் அவர் களமிறகுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
Summary
Spencer Johnson joined csk team, will be he play against mumbai indians.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |

மும்பைக்கு எதிராக சிஎஸ்கே பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள்!

மும்பை பந்துவீச, சிஎஸ்கே பேட்டிங்: இந்தப் போட்டியிலும் தோனி இல்லை!

கீப்பிங் பயிற்சியில் எம்.எஸ். தோனி..! மும்பைக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா?
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

