சிஎஸ்கேவின் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரேவுக்கு (18 வயது) இடது தொடையில் தசைக் கிழிவு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் பல போட்டிகளில் விளையாடமால் போக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 194/9 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 184/8 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது.
இந்தப் போட்டியில் இம்பாக்ட் வீரராக களமிறங்கிய ஆயுஷ் மாத்ரே 12 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருக்கும்போது 2 ரன்கள் ஓடியபோது காயம் ஏற்பட்டது. பின்னர், பிசியோதெரபிஸ்ட் வந்து தற்காலிக சிகிச்சை அளித்த பிறகு. 1 ரன் ஓடவே மிகவும் சிரமப்பட்டார்.
அடுத்த பந்திலேயே ஆயுஷ் மாத்ரே ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த பிறகு சிஎஸ்கே அணி மெதுவாக விளையாடி இறுதியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
இது குறித்து சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கல் ஹசி கூறியிருப்பதாவது:
நிச்சயமாக தொடையின் தசையில் கிழிவு ஏற்பட்டுள்ளது. அது எவ்வளவு மோசமானது எனத் தெரியவில்லை. நாளைக்கு அல்லது அடுத்த நாள் அவருக்கு ஸ்கேன் எடுக்கப்படும். அவர் இல்லையென்றால் சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும் என்றார்.
இந்த சீசனில் ஆயுஷ் மாதேஎ 201 ரன்களை 177.87 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி இருக்கிறார். அவர் இல்லை என்றால் உர்வில் படேலுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமெனக் கூறப்படுகிறது.
Summary
'Big, big loss' for CSK as Mhatre suffers hamstring says csk batting coach hussey
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐபிஎல் 2026ல் முதல்முறை... சிஎஸ்கே அணியின் பேட்டிங் சாதனை!

36 பந்துகளில் சதம்; ரத்தம் சொட்ட விளையாடிய இளம் வீரரை குறிவைக்கும் சிஎஸ்கே! யார் இந்த ஆயுஷ் வர்தக்?

அதிரடியாக சதம் விளாசிய சஞ்சு சாம்சன்!

டாப் 3ல் 2 இடங்களைப் பிடித்து சாதனை படைத்த சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

