ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தோல்விக்குக் காரணம் இதுதான்... மனம் திறந்த தில்லி கேப்டன்!

தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அக்‌ஷர் படேல் பேசியிருப்பதாவது...

News image

ஆட்டமிழந்து வெளியேறிய தில்லி அணியின் கேப்டன். - படம்: ஏபி

Updated On :12 ஏப்ரல் 2026, 11:17 am IST

சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியுற்ற பிறகு தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அக்‌ஷர் படேல், “ஈரப்பதம் இருந்துமே சிஎஸ்கே நன்றாக பந்துவீசினார்கள்” எனக் கூறினார்.

நேற்றிரவு சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 212/2 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய தில்லி அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது

தோல்விக்குப் பிறகு தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அக்‌ஷர் படேல் பேசியிருப்பதாவது:

நன்றாகவே தொடங்கினோம். ஆனால், சேஸிங்கில் பவர்பிளேவிற்குப் பிறகு விரைவாக 2, 3 விக்கெட்டுகளை இழந்தது போட்டிக்கான உந்தத்தை குறைத்தது. என்னைப் பொறுத்தவரை ஃபீல்டிங்தான் மிகப்பெரிய வித்தியாசமாகவும் ஆட்டத்தை மாற்றுவதாகவும் இருந்தது.

தொடர்ச்சியான விக்கெட்டுகள் இழப்பு, உத்வேகத்தை குறைத்தது. பேட்டர்கள் நன்றாகவே விளையாடினார்கள். ஃபீல்டிங்கில்தான் சொதப்பிவிட்டார்கள். எதிரணியை 215- 217 ரன்களுக்குள் சுருட்டி விட்டோம். இத்தனைக்கும் நன்றாக விளையாடிய பேட்டர்கள் இருந்தார்கள். 2 விக்கெட்டுகள்தான் இழந்திருந்தார்கள்.

பேட்டிங் செய்ய ஏதுவான பிட்ச் இது. நாங்கள் ஃபீல்டிங்கில் சில கேட்ச்களை தவறாமல் பிடித்திருந்தால் ஆட்டம் வேறு மாதிரி முடிந்திருக்கும். பிட்ச் பெரிதாக மாறவில்லை. ஈரப்பதம் இருந்துமே சிஎஸ்கே நன்றாக பந்துவீசினார்கள் என்றார்.

இந்த சீசனில் சிஎஸ்கே அணி தனது முதல் வெற்றியைப் பெற்று புள்ளிப் பட்டியலில் 9ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கடைசி இடத்தில் இருக்கும் கேகேஆர் அணியுடன் அடுத்த போட்டியில் விளையாடுகிறது.

Summary

I feel the difference in fielding was the game-changing moment for me dc captain Axar Patel.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.