தில்லியில் ஐபிஎல் ஆட்டத்தை வைத்து சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 4 பேரை காவல்துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.
2026 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 28 ஆம் தேதி தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. போட்டி நடக்கும் அதே வேளையில், அதை வைத்து சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபடுவதும் நடைபெறுகிறது. இதனிடையே, சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 4 பேரை தில்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவர்கள், தில்லி மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியை நேரலையில் பார்த்தவாறு செல்போன்கள் மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டபோது பிடிபட்டுள்ளனர்.
சூதாட்டத்துக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பிடிபட்ட குற்றவாளிகள் ஹிமன்ஷு (30), அமன் ஜெயின்(34), ஆகாஷ் கார்க் (31) மற்றும் ஆஷிஷ் குமார் (35) எனக் கண்டறியப்பட்டுள்ளன.
முதற்கட்ட விசாரணையில் குற்றவாளிகள் அடிக்கடி இதுமாதிரியான சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Summary
The police arrested four people on Friday in Delhi for engaging in illegal betting on an IPL match.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக கேகேஆர் பந்துவீச்சு!

தில்லி பந்துவீச்சு: முதல் வெற்றிக்கான தேடலில் குஜராத்!
ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 போ் கைது

தில்லியில் ரூ.400 தொடர்பான தகராறில் இளைஞர் கொலை: 3 சிறுவர்கள் கைது
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

