மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஈரான் போர்: பலத்த பாதுகாப்புகளுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராகி வரும் பாகிஸ்தான் !

ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போரை முடிவுக்குக் கொண்டுவர பலத்த பாதுகாப்புகளுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராகும் பாகிஸ்தான் குறித்து...

News image

பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் - AP

Updated On :10 ஏப்ரல் 2026, 3:37 pm IST

ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போரை முடிவுக்குக் கொண்டுவர பலத்த பாதுகாப்புகளுடன் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தலைநகரமான இஸ்லாமாபாத் தயாராகி வருகிறது.

ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையே கடந்த பிப். 28 ஆம் தேதி தொடங்கிய தாக்குல்கள் ஒரு முடிவை எட்டாமல் தொடர்ந்த நிலையில், ஈரானுடன் இரண்டு வார கால போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை (ஏப்.8) அதிகாலையில் அறிவித்தார்.

இந்த இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்தத்தத்துக்கு பாகிஸ்தான் முக்கிய மத்தியஸ்தராக பங்காற்றியுள்ளது. இதைத் தொடர்ந்து, அனைத்து சர்ச்சைகளையும் தீர்ப்பதற்கான ஒரு ஒப்பந்தத்தை எட்டுவது குறித்த பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, அமெரிக்க மற்றும் ஈரான் தூதுக்குழுக்களுக்கு ஏப்ரல் 10 ஆம் தேதி பாகிஸ்தான் வருமாறு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில், 10 பேர் கொண்ட குழு ஈரானிலிருந்து பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் வந்தடையும் என்று தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த ஒரு பதிவை பாகிஸ்தானுக்கான ஈரான் தூதர் ரெசா அமிரி நீக்கியிருந்த நிலையில் அந்தக் குழு வெள்ளிக்கிழமை இஸ்லாமாபாத் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான அமெரிக்க குழுவும், போர் தொடங்குவதற்கு முன்பு ஈரானுடன் பேச்சுவார்த்தைகளை வழிநடத்திய ஜாரெட் குஷ்னர் மற்றும் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோரும் இஸ்லாமாபாத்துக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இதனால், பாகிஸ்தானின் தலைநகரமான இஸ்லாமாபாத்தில் 10,000 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், இன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் துணை பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தார் வெளியிட்ட சமூக ஊடகப்பதிவு ஒன்றில், “இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை 2026 -க்கு வருகைதரும் பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள் அனைவரையும் வரவேற்கிறோம். அவர்கள் அனைவரையும் விசா இல்லாமல் பயணிக்க அனுமதி அளிக்குமாறு அனைத்து விமான நிறுவனங்களைக் கேட்டுக்கொள்கிறோம். அவர்கள் பாகிஸ்தான் வந்தடைந்த பிறகு, குடியேற்ற அதிகாரிகளால் விசா வழங்கப்படும்” எனக் குறிப்பிட்டார்.

Summary

Islamabad, the capital of Pakistan, is preparing to host negotiations under tight security to bring an end to the conflict involving Iran, Israel, and the United States.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.