தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் விளையாடவுள்ளதை சாய் சுதர்சன் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி திடலில் நாளை (ஏப்ரல் 8) நடைபெறும் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. தசைப் பிடிப்பு காரணமாக கடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் விளையாடவில்லை. ரஷித் கான் அணியைக் கேப்டனாக வழிநடத்தினார். அந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் தோல்வியைத் தழுவியது.
இந்த நிலையில், தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் ஷுப்மன் கில் விளையாடவுள்ளதை தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஷுப்மன் கில் மிகவும் நன்றாக இருக்கிறார். தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவார். குஜராத் டைட்டன்ஸ் அணியின் டாப் ஆர்டரில் யாரேனும் ஒருவர் நீண்ட நேரம் களத்தில் நிலைத்து நின்று விளையாடினால், அது அணிக்கு மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கும்.
எங்களது மிடில் ஆர்டர் பேட்டிங் மீதும் நம்பிக்கை உள்ளது. கடந்த ஆண்டு இதே அணியோடு களமிறங்கி பிளே ஆஃப்க்கு தகுதி பெற்றோம். வெறும் இரண்டு போட்டிகள் மட்டுமே முடிந்துள்ளன. எங்களது மிடில் ஆர்டர் பேட்டர்கள் போட்டியை வென்று கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
குஜராத் டைட்டன்ஸ் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Sai Sudharsan has confirmed that Gujarat Titans captain Shubman Gill will play in the match against Delhi Capitals.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடல்காற்று வீசுவதால் கவலையில்லை... பந்துவீச்சு குறித்து ஷுப்மன் கில்!

அகமதாபாத் திடலை தனது கோட்டையாக மாற்றிய ஷுப்மன் கில்!

ஷுப்மன் கில் அரைசதம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 2-வது வெற்றி!

குஜராத் டைட்டன்ஸ் கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம்!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


