தென்னாப்பிரிக்காவின் நட்சத்திர வீரர் வான் டெர் டுசென் (37 வயது) சர்வதேச போட்டிகளில் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவின் 2026-27 சீசனுக்கான ஒப்பந்தப் பட்டியலில் தேர்வாகாததால், தனது ஓய்வு முடிவினை வான் டெர் டுசென் அறிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்க அணியில் 2018ல் அறிமுகமாகிய வான் டெர் டிசென் 18 டெஸ்ட் போட்டிகளில் 905 ரன்கள், 71 ஒருநாள் போட்டிகளில் 2,657 ரன்கள், 57 டி20 போட்டிகளில் 1,406 ரன்களும் எடுத்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் சராசரி 50.13ஆக இருக்கிறது. அடுத்தாண்டு ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெறும் நிலையில் வான் டெர் டுசெனின் இந்த முடிவு தென்னாப்பிரிக்க ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பயிற்சியாளர்கள், தேர்வுக்குழு தலைவர்கள், ரசிகர்கள், தனது குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்த வான் டெர் டுசென், “சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றாலும் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன்” எனக் கூறியுள்ளார்.
Summary
South African Batter Rassie Van Der Dussen Announces Retirement From International Cricket After Contract Snub.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மந்திராலயம் சென்ற வேன் விபத்து! 8 பக்தர்கள் பலி!
காரைக்குடி: வேனிலிருந்து இறங்கி சைக்கிள் ஓட்டிய விஜய்!

டி20 உலகக் கோப்பை தோல்விக்கு நியூசிலாந்தை டி20 தொடரில் பழிவாங்கிய தென்னாப்பிரிக்கா!

டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் விளையாடுவேனா? டி20 கேப்டன் சூர்யகுமார் பதில்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

