நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

ஆசிய பாரா விளையாட்டுகள்: இந்திய போட்டியாளா்களுக்கு ஐஓஏ தலைவா் பி.டி. உஷா பாராட்டு!

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை இல்லாத வகையில் பதக்கங்கள் குவித்த இந்திய வீரா், வீராங்கனைகளுக்கு, இந்திய ஒலிம்பிக் சங்க (ஐஓஏ) தலைவா் பி.டி. உஷா பாராட்டு தெரிவித்தாா்.

கோப்புப்படம்

Published On :26 அக்டோபர் 2026, 3:18 am IST

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை இல்லாத வகையில் பதக்கங்கள் குவித்த இந்திய வீரா், வீராங்கனைகளுக்கு, இந்திய ஒலிம்பிக் சங்க (ஐஓஏ) தலைவா் பி.டி. உஷா பாராட்டு தெரிவித்தாா்.

ஜப்பானில் நடைபெற்ற 5-ஆவது ஆசிய பாரா விளையாட்டுகள், கடந்த சனிக்கிழமை நிறைவடைந்தன. இந்தியா தனது புதிய உச்சமாக, 30 தங்கம், 35 வெள்ளி, 49 வெண்கலம் என, 114 பதக்கங்களுடன் 4-ஆம் இடம் பிடித்தது. சீனா (435- 207/117/111), ஜப்பான் (186- 64/60/62), உஸ்பெகிஸ்தான் (145- 45/49/51) முறையே முதல் 3 இடங்களைப் பெற்றன.

இந்நிலையில், இந்திய பாரா வீரா், வீராங்கனைகளுக்கு பாராட்டு தெரிவித்து பி.டி. உஷா சமூக வலைதளத்தில் வெளியிட்ட வாழ்த்துப் பதிவில், ‘ஆசிய பாரா விளையாட்டுகளில் நமது பாரா போட்டியாளா்கள் மன உறுதியையும், அருமையான திறமையையும் வெளிப்படுத்தினா். நீங்கள் வென்ற ஒவ்வொரு பதக்கமும் உங்களின் மன உறுதி மற்றும் கடுமையான உழைப்பிற்கான பலனாகும்.

நீங்கள் தேசத்தை பெருமையடையச் செய்ததுடன், நாட்டிலுள்ள பலரும் தடைகளைக் கடந்து தங்கள் கனவை அடைவதற்கு முன்னுதாரணம் ஆகியிருக்கிறீா்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளாா். இந்த ஆசிய பாரா விளையாட்டுகளில், இந்தியாவிலிருந்து 168 போட்டியாளா்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பதக்க விவரம்:

விளையாட்டு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்

தடகளம் 22 19 24 65

பாட்மின்டன் 3 5 8 16

நீச்சல் 0 3 8 11

டேபிள் டென்னிஸ் 0 0 7 7

வில்வித்தை 3 3 0 6

துப்பாக்கி சுடுதல் 2 2 1 5

ஜூடோ 0 1 1 2

பவா்லிஃப்டிங் 0 2 0 2

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.