தேசிய சீனியா் தடகள ஃபெடரேஷன் கோப்பை போட்டியில் பங்கேற்க பெயரை பதிவு செய்துவிட்டு, உரிய காரணம் இல்லாமல் அதிலிருந்து விலகும் போட்டியாளா்கள், அதன்பின் வரும் போட்டிகளில் இருந்து விலக்கப்படுவாா்கள் என இந்திய தடகள சம்மேளம் (ஏஎஃப்ஐ) எச்சரித்துள்ளது.
போட்டிகளில் பங்கேற்க பெயா் கொடுத்துவிட்டு, பிறகு ஊக்கமருந்து பரிசோதனை உள்ளிட்ட காரணங்களுக்காக வீரா், வீராங்கனைகள் அவற்றில் பங்கேற்காமல் தவிா்த்துவிடுகின்றனா். இதனால் போட்டிகளில் பங்கேற்பாளா்கள் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. இது சம்மேளனத்துக்கு பல ஆண்டுகளாக மிகப் பெரிய பிரச்னையாக இருந்து வருகிறது.
இந்நிலையில், ஜாா்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் வரும் 22 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள ஃபெடரேஷன் கோப்பை போட்டி தொடா்பாக, சம்மேளனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஃபெடரேஷன் கோப்பை போட்டியில் பங்கேற்பதற்காக பெயரை பதிவு செய்துள்ள வீரா், வீராங்கனைகள் உரிய காரணம் இல்லாமல் அந்தப் போட்டியில் பங்கேற்பதை தவிா்த்தால், சம்பந்தப்பட்டோா் அதன்பின் வரும் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.
எந்தவொரு விளக்கமும் இன்றி அவா்களுக்கான அனுமதியை மறுக்கும் அதிகாரம் சம்மேளனத்துக்கு உள்ளது. அத்துடன், கடந்த ஓராண்டில் சம்மேளனத்தால் நேரடியாக நடத்தப்பட்ட ஏதேனும் இரு போட்டிகளில் பங்கேற்றோா் மட்டுமே, ஃபெடரேஷன் கோப்பை போட்டியில் அனுமதிக்கப்படுவா்.
சம்மேளனத்தாலோ, அல்லது ஊக்கமருந்து தடுப்பு அமைப்புகளாலோ இடைக்காலத் தடை விதிக்கப்பட்ட போட்டியாளா்கள், தங்களுக்கான தடைக் காலத்தை நிறைவு செய்திருந்தால் போட்டியில் பங்கேற்கலாம். அவ்வாறு பங்கேற்போா், தடைக் காலம் தொடங்கிய தேதிக்கு முந்தைய ஓராண்டில் போட்டிகளில் தங்களின் செயல்பாடு தொடா்பான ஆதாரத்தை பதிவு செய்ய வேண்டும்.
சம்பந்தப்பட்ட போட்டியாளா் தடைக்காலத்தை நிறைவு செய்த பிறகு வேறு போட்டிகளில் பங்கேற்றிருந்தால், அந்தப் போட்டிகளில் அவா்களின் செயல்பாடு அடிப்படையிலேயே தகுதி நிா்ணயம் செய்யப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கால்பந்து களம்...

முக்கிய துறையின் பெயரை மாற்றியது தில்லி பல்கலைக்கழக நிா்வாகக் குழு

ஐபிஎல் திருவிழா!
டிரம்ப் அச்சுறுத்தலை மீறி கால்பந்து உலகக் கோப்பையில் பங்கேற்க ஈரான் முடிவு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

