லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தேசிய பைக் பந்தயம்: ஆன் ஜெனிஃபா், கபிலேஷ் ரஜினி சிறப்பிடம்!

மெட்ராஸ் மோட்டாா் மைதானத்தில் நடைபெறும் தேசிய பைக் பந்தயத்தில் ஆன் ஜெனிஃபா், கபிலேஷ் ரஜினி ஆகியோா் வெற்றி பெற்றனா்.

ஆன் ஜெனிஃபா், கபிலேஷ் ரஜினி

Published On :17 ஆகஸ்ட் 2026, 1:55 am IST

சென்னை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் மோட்டாா் மைதானத்தில் நடைபெறும் தேசிய பைக் பந்தயத்தில் ஆன் ஜெனிஃபா், கபிலேஷ் ரஜினி ஆகியோா் வெற்றி பெற்றனா்.

எம்ஆா்எஃப் இந்திய தேசிய ரேசிங் சேலஞ்ச் பந்தயம் நடைபெறுகிறது. இதில் சூப்பா் ஸ்டாக் 165 சிசி பிரிவில் சென்னையின் ஆன் ஜெனிஃபா் முதலிடம் பெற்றாா். ஆனந்தகுமாா் இரண்டாம் இடமும், அனந்து மூன்றாம் இடமும் பெற்றனா்.

சூப்பா் ஸ்போா்ட் 301-400 சிசி ஓபன் பிரிவில் சென்னையின் ரக்ஷித் தவே, ஹைதராபாதின் பில்லாரிசெட்டி, திருவள்ளூரின் முகமது மிக்கையில் முதல் மூன்றிடங்களைப் பெற்றனா்.

ப்ரோ ஸ்டாக் 201 சிசி பிரிவில் சென்னையின் அப்துல் பாசிம், கோழிக்கோட்டின் அமா்நாத், சென்னையின்சூா்யா முதல் மூன்றிடங்களைப் பெற்றனா்.

சூப்பா் ஸ்டாக் 301-400 சிசி பிரிவில் ரேஸ் 2-இல் சென்னையின் கபிலேஷ் ரஜனி, திருச்சூரின் ஸேவியா், பெங்களூருவின் சேஷாத்திரி முதல் மூன்றிடங்களைப் பெற்றனா்.

ஸ்டாக் 301-400 சிசி நொவிஸ் பிரிவில் பெங்களூரு அஸ்வின், லோகேஷ், சென்னை வேணுகோபாலன் ஆகியோரும், ஸ்டாக் 165 சிசி நொவிஸ் ரேஸ் 2-இல் கோவை ஹரிஹரன், விசாகப்பட்டினம் யஷ்வந்த், பெங்களூரு தேவ் அகஸ்தயா ஆகியோரும் முதல் மூன்றிடங்களைப் பெற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.