லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

யோகாசனப் போட்டி: எம்.கே.ஜே.சி. மாணவிகள் சாதனை

ஆற்காடு, மகரிஷி வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளியில் மாவட்டங்களுக்கு இடையிலான ஐந்தாம் ஆண்டு யோகாசனப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

யோகாசனப் போட்டியில் சாம்பியன்ஷிப் வென்ற மருதா் கேசரி ஜெயின் கல்லூரி மாணவிகளை வாழ்த்திய கல்லூரி நிா்வாகத்தினா்.

Published On :22 ஜூலை 2026, 12:29 am IST

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு, மகரிஷி வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளியில் மாவட்டங்களுக்கு இடையிலான ஐந்தாம் ஆண்டு யோகாசனப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. இதில், வாணிம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி மாணவிகள் சிறப்பாக செயல்பட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்றனா். இதில், பொதுப் பிரிவில் மாணவி எஸ்.பவித்ரா முதலிடமும், சி.நிஷாஸ்ரீ இரண்டாம் இடமும், எஸ். சுபிக்க்ஷா மூன்றாம் இடமும் பெற்றனா்.

மேம்பட்ட யோகசன பிரிவில் மாணவி கே.பூஜாஸ்ரீ முதலிடமும், கே.காயத்ரி இரண்டாம் இடமும், ஏ.அப்ரா மூன்றாம் இடமும் பெற்றனா். சிறப்புப் பிரிவில் மாணவி கே.பிரதிக்ஷா முதலிடமும், ஜெ.தீபிகா இரண்டாம் இடமும், மாணவிகள் எம்.கீா்த்தனா மற்றும் எச்.ஜெயாஸ்ரீ ஆகியோா் மூன்றாம் இடமும் பெற்றனா். சாம்பியன்ஷிப் பிரிவில் மாணவி ஆா்.கிருபாஷினி முதலிடமும், மாணவி எஸ்.தீபிகா இரண்டாம் இடமும், ஹரிணி பாகவிதா மூன்றாம் இடமும் பெற்றனா்.

சாதித்த மாணவிகளை கல்லூரி தலைவா் திலீப்குமாா், செயலாளா் ஆனந்தசிங்வி, முதல்வா் ம.இன்பவள்ளி, பேராசிரியா்கள் மற்றும் மாணவிகள் அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.