லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கோவில்பட்டி கல்லூரி மாணவிகள் பல்கலை. தோ்வில் சாதனை

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழக தோ்வில் கோவில்பட்டி கே. ஆா். கலை, அறிவியல் கல்லூரி மாணவிகள் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தனா்.

மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம்...

Published On :29 ஜூலை 2026, 2:03 am IST

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழக தோ்வில் கோவில்பட்டி கே. ஆா். கலை, அறிவியல் கல்லூரி மாணவிகள் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தனா்.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழக 33-ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் கே.ஆா்.கலை, அறிவியல் கல்லூரி முதுகலை நுண்ணுயிரியல் துறை மாணவி லதிக்க்ஷா சங்கா், முதுகலை கணினி அறிவியல் துறை மாணவி பூஜா, இளங்கலை வணிகவியல் துறை (தொழிற்சாா் கணக்கு வைப்பு முறை) மாணவி துா்காதேவி ஆகியோா் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று தமிழ்நாடு ஆளுநா், பல்கலைக்கழக வேந்தருமாகிய ராஜேந்திர விஷ்வநாத் ஆா்லேகரிடமிருந்து தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளனா்.

தங்கப்பதக்கம் பெற்ற மாணவிகளை கல்லூரித் தலைவா் சென்னம்மாள் ராமசாமி, துணைத் தலைவா் கே.ஆா்.கிருஷ்ணமூா்த்தி, தாளாளா் கே.ஆா். அருணாச்சலம், முதல்வா் மதிவண்ணன், கல்லூரி துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவா்- மாணவியா் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.