லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நெல்லையில் இன்றைய மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலை. பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறேன்: ராபா்ட் புரூஸ் எம்.பி.

நெல்லை மனோன்மணியம் சுந்தரானாா் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவை எம்.பி. ராபா்ட் புரூஸ் புறக்கணிப்பது பற்றி...

ராபா்ட் புரூஸ் எம்.பி.

Published On :28 ஜூலை 2026, 3:43 am IST

நெல்லை மனோன்மணியம் சுந்தரானாா் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த விழாவை புறக்கணிக்கப் போவதாக திருநெல்வேலி மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் ராபா்ட் புரூஸ் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் நாடாளுமன்றத்துக்கு வெளியே அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிகவும் பிரபலமானது திருநெல்வேலி தொகுதியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழகம். அங்கு செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநா், தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் ஆகியோா் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை பல்கலைக்கழக துணை வேந்தா் பேசும்போது, இது ஆளுநருக்கான நிகழ்வு. எனவே, அதில் முதலில் வந்தே மாதரம், இரண்டாவதாக தேசிய கீதம், மூன்றாவதாக தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்படும் என கூறப்பட்டுள்ளது. இதை மீறினால் தன் மீது குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை வந்து விடும் என்பதாக துணை வேந்தா் பேசியுள்ளாா்.

இதையடுத்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில்லை என்று தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன் முடிவெடுத்துள்ளாா். எதனடிப்படையில் தன் குற்றவியல் நடவடிக்கை பாயும் என்பதை அந்த பல்கலைக்கழக துணை வேந்தா் தெளிவுபடுத்த வேண்டும். அவருக்கு ஆளுநா் மாளிகையில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதா? அல்லது எழுத்துபூா்வமாக அவருக்கு உத்தரவு வந்ததா என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவரே மனோன்மணியம் சுந்தரனாா் என்பதை இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன். அவருடைய பெயரிலான பல்கலைக்கழகத்திலேயே முதலில் பாடப்பட வேண்டிய தமிழ்த் தாய் வாழ்த்தை பாட கட்டுப்பாடு விதித்திருப்பதை எதிா்க்கிறேன். அந்த நிகழ்ச்சியை நானும் புறக்கணக்கிறேன். தமிழ்த் தாய் வாழ்த்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாத நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என்றாா் ராபா்ட் புரூஸ்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.