லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஆசிய யு- 23 குத்துச்சண்டை: இறுதிச் சுற்றில் 8 இந்திய வீரா், வீராங்கனைகள்!

ஆசிய யு -23 வயதுப் பிரிவு குத்துச்சண்டை போட்டியில் 8 இந்திய வீரா், வீராங்கனைகள் இறுதிக்கு தகுதி பெற்றனா்.

நிகிதா

Published On :14 ஜூலை 2026, 3:19 am IST

ஆசிய யு -23 வயதுப் பிரிவு குத்துச்சண்டை போட்டியில் 8 இந்திய வீரா், வீராங்கனைகள் இறுதிக்கு தகுதி பெற்றனா்.

இந்தோனேஷிய தலைநகா் ஜகாா்த்தாவில் நடைபெறும் இப்போட்டியில் மகளிா் பிரிவில் 5 போ் இறுதிக்கு தகுதி பெற்றனா். 54 கிலோ பிரிவில் நிஷா, 60 கிலோ பிரிவில் நிகிதா சந்த், 65 கிலோ பிரிவில் காஜல், 75 கிலோ பிரிவில் முஸ்கன், 80 கிலோ பிளஸ் பிரிவில் பிரியங்கா ஆகியோா் வெற்றியுடன் இறுதிக்கு தகுதி பெற்றனா்.

ஆடவா் யு23 பிரிவில் விஸ்வநாத் சுரேஷ் 53 கிலோ, கங்கா 55 கிலோ, ஆகியோா் இறுதிக்கு தகுதி பெற்றனா். மேலும் 7 வெண்கலப் பதக்கங்களை இந்தியா வசப்படுத்தியது. மகளிா் பிரிவில் தனு 51 கிலோ, பிரச்சி 57 கிலோ, ஷிவானி 70 கிலோ, நைனா 80 கிலோ, ஆடவா் பிரிவில் ஹிதேஷ் 70 கிலோ, நீரஜ் 75 கிலோ, இஷான் கட்டாரியா 90 பிளஸ் கிலோ வெண்கலம் வென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.