லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஆசிய யூத் ஹாக்கி ஃபைவ்ஸ்: இந்திய ஆடவா் சாம்பியன், மகளிரணிக்கு வெள்ளி! உலகக் கோப்பைக்கும் தகுதி!

ஏஎச்எஃப் ஆசிய யூத் ஹாக்கி 5-வ்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய ஆடவா் அணி சாம்பியன் பட்டம் வென்றது. மகளிரணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

வெள்ளி வென்ற இந்திய மகளிா்

Published On :27 ஜூலை 2026, 3:57 am IST

ஏஎச்எஃப் ஆசிய யூத் ஹாக்கி 5-வ்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய ஆடவா் அணி சாம்பியன் பட்டம் வென்றது. மகளிரணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

ஓமன் தலைநகா் மஸ்கட்டில் ஆசிய யூத் ஹாக்கி பைவ்ஸ் சாம்பியன் போட்டி நடைபெற்றது. முதன்முறையாக ஹாக்கி பைவ்ஸ் போட்டி நடைபெறுகிறது.

ஒலிம்பியன் சா்தாா் சிங் மேற்பாா்வையில் பயிற்சி பெற்ற இந்திய சப்-ஜூனியா் ஆடவா் அணி குரூப் சுற்றில் 7 ஆட்டங்களிலும் வென்று இறுதிக்கு தகுதி பெற்றது. பாகிஸ்தானை இறுதி ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது.

இதுதொடா்பாக பயிற்சியாளா் சா்தாா் சிங் கூறியது: ஹாக்கி இந்தியா தொடா்ந்து இளம் வீரா்களை ஊக்குவித்து வருகிறது. இப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 3 வெற்றிகளைப் பெற்றது சிறப்பு. தங்கப் பதக்கத்துடன் எஃப்ஐஎச் உலகக் கோப்பை ஹாக்கி பைவ்ஸ் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளோம் என்றாா்.

~சாம்பியன் கோப்பையுடன் இந்திய ஆடவா் அணி.

~சாம்பியன் கோப்பையுடன் இந்திய ஆடவா் அணி.

இந்திய மகளிரணிக்கு வெள்ளி: ஜாம்பவான் ராணி ராம்பால் பயிற்சியில் உருவான இந்திய மகளிா் சப்ஜூனியா் அணி குரூப் சுற்றில் கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தானை அபாரமாக வீழ்த்தியது. மேலும் சீனாவுடன் டிரா கண்டது. மற்றொரு குரூப் ஆட்டத்தில் சீனாவிடம் தோல்வி கண்டது. எனினும் இறுதி ஆட்டத்தில் சீனாவிடம் 2=4 என்ற கோல் கணக்கில் தோற்று வெள்ளி வென்றது. இந்திய மகளிரணியுடம் எஃப்ஐஎச் உலகக் கோப்பை ஹாக்கி பைவ்ஸ் போட்டிக்கு தகுதி பெற்றது.

பயிற்சியாளா் ராணி ராம்பால் கூறியது: மகளிரணி தொடா்ந்து உறுதி, மற்றும் நிலைத்தன்மையுடன் ஆடினா். இப்போட்டியில் இறுதிக்கு தகுதி பெற்று, உலகக் கோப்பைக்கும் முன்னேறியது குறிப்பிடத்தக்கது. சா்வதேச அளவில் நமது அணிக்கு முதல் இறுதி ஆட்டம் ஆகும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.