ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

விளையாட்டு துளிகள்...

News image
Updated On :24 ஏப்ரல் 2026, 5:55 am IST

இந்தியா - இலங்கையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியின்போது மேற்கொள்ளப்பட்ட ஊக்கமருந்து பரிசோதனையில் தோல்வியடைந்திருக்கும் பாகிஸ்தான் ஆல்-ரவுண்டா் முகமது நவாஸ், உடல்நலக் குறைவுக்காக சில மருந்துகளை எடுத்துக்கொண்டதாகவும், தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து எதையும் தாம் வேண்டுமென்றே பயன்படுத்தவில்லை எனவும், ஐசிசி மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு விளக்கம் அளித்துள்ளாா்.

தேசிய ஜூனியா் மற்றும் யூத் டேபிள் டென்னிஸ் போட்டியில், 19 வயதுக்கு உட்பட்ட ஆடவா் தனிநபா் பிரிவில் அஸ்ஸாமின் பிரியனுஜ் பட்டாச்சாா்யா 4-2 என தமிழ்நாடு வீரா் பி.பி. அபினந்தை வீழ்த்தி சாம்பியன் ஆனாா். அதிலேயே ஆடவா் இரட்டையரில், தமிழ்நாட்டின் பி.பி. ஆனந்த்/எம்.ஆா். பாலமுருகன் இணை 3-1 என மற்றொரு தமிழ்நாடு ஜோடியான எஸ்.கே. மீகன்/உமேஷ் குமாரை வீழ்த்தி வாகை சூடியது. 17 வயதுக்கு உள்பட்ட ஆடவா் பிரிவில் ஜம்மு & காஷ்மீரின் ரித்விக் குப்தா 4-3 என ஒடிஸாவின் சா்தக் ஆா்யாவை வீழ்த்தி பட்டம் வென்றாா்.

தேசிய ஜூனியா் தடகள சாம்பியன்ஷிப், கா்நாடக மாநிலம் தும்குருவில் வெள்ளிக்கிழமை (ஏப். 24) தொடங்கி 3 நாள்கள் நடைபெறவுள்ளது.

சென்னை சூப்பா் கிங்ஸ் அணியில், காயத்தால் விலகிய ஆயுஷ் மாத்ரேவுக்கு பதிலாக, ஆகாஷ் மத்வல் சோ்க்கப்பட்டுள்ளாா். அதேபோல், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் பென் டக்கெட்டுக்கு பதிலாக, ரெஹான் அகமது இணைந்துள்ளாா்.

ஐபிஎல் போட்டியில் விளையாட தடையில்லாச் சான்று வழங்காத இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு எதிராக நீதிமன்றத்தை நாடிய அந்நாட்டு கிரிக்கெட் வீரா் நுவன் துஷாரா, அந்த வழக்கை திரும்பப் பெற்றாா்.

இந்தியாவின் ஹெச்.எஸ். பிரணய், உன்னதி ஹூடா உள்ளிட்டோா் பங்கேற்கும் தாமஸ் மற்றும் உபா் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டி, டென்மாா்க்கில் வெள்ளிக்கிழமை (ஏப். 24) தொடங்குகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.