பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

காஞ்சிபுரம் ஹயக்ரீவர் கோயிலில் நெல்லில் எழுதி குழந்தைகளுக்கு கல்வி துவக்கிய பெற்றோர்கள்!

காஞ்சிபுரம் ஹயக்ரீவர் கோயிலில் வித்யாரம்பம் பற்றி..

ஹயக்ரீவர் கோயிலில் கல்வி துவக்கிய பெற்றோர்கள்

Published On :20 அக்டோபர் 2026, 12:37 pm IST

விஜயதசமி விழாவையொட்டி காஞ்சிபுரம் ஹயக்ரீவர் கோயிலில் நெல்லில் உயிர் எழுத்தான "அ" எழுதி தங்கள் குழந்தைகளுக்கு கல்வியை பெற்றோர்கள் துவக்கி வைத்தனர்.

நவராத்திரி உற்சவத்தின் கடைசி நாளான விஜயதசமி விழா அன்று துவங்கும் அனைத்து செயல்களும் வெற்றியடையும் என்பது ஐதீகம்.

கல்வி கடவுளான ஹயக்ரீவர் முன்பு விஜயதசமி நாளன்று குழந்தைகளுக்கு முதல் கல்வியை தொடங்கி வைப்பது தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கமாகும். அந்த வகையில் காஞ்சிபுரம் விளக்கு ஒளி பெருமாள் கோயில் அருகில் உள்ள பாரகாலசுவாமி மடத்தில் தனி சன்னதி கொண்டு எழுந்தருளி இருக்கும் ஹயக்ரீவர் கோயிலுக்கு காலையிலேயே தங்கள் குழந்தைகளை அழைத்து வந்தனர்.

பள்ளிகளில் சேர்ப்பதற்கு முன்பாக கோயிலுக்கு அழைத்து வந்து, சிலேட்டு பலப்பம் வாங்கி கொடுத்து ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜை செய்து கோயில் அர்ச்சகர் மூலம் நெல்லில் உயிர் எழுத்தான "அ"வை எழுத வைத்து தங்கள் குழந்தைகளுக்கு முதல் கல்வியை துவக்கி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான இளம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கோயிலுக்கு அழைத்து வந்து நெல்லில் ஆ எழுத வைத்து தங்கள் குழந்தைகளுக்கு முதல் கல்வியை ஆர்வத்துடன் துவக்கி வைத்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.