கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திருப்பதியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி! ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

திருப்பதி பிரம்மோற்சவத்தின் இறுதி நாளில் சக்கரஸ்நான தீர்த்தவாரி சிறப்பாக நடைபெற்றது பற்றி..

சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவு

Published On :20 அக்டோபர் 2026, 12:16 pm IST

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தின் இறுதி நாளான இன்று சக்கரஸ்நான தீர்த்தவாரி இன்று காலை நடைபெற்றது.

திருப்பதி பிரம்மோற்சவத்தின் இறுதி நிகழ்வான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற நவராத்திரி பிரம்மோற்சவம், சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவடைந்தது.

திருவேங்கடமுடையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 12-ஆம் தேதி தொடங்கிய நவராத்திரி பிரம்மோற்சவத்தையொட்டி, மலையப்ப சுவாமி ஸ்ரீ தேவி, பூதேவியுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளில், உற்சவ மூர்த்திகள் மற்றும் சக்கரத்தாழ்வார் வராக சுவாமி கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு பால், தயிர், தேன் உள்ளிட்ட சுகந்த திரவியங்களால் திருமஞ்சனம் நடைபெற்றது.

சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி முடிந்தவுடன் அனைத்துப் பக்தர்களும் தெப்பக்குளத்தில் நீராடினர். சக்கர ஸ்நானத்தைத் தொடர்ந்து மாலை ஊஞ்சல் சேவை நடைபெறும். இதனைத் தொடர்ந்து இரவு பிரம்மோற்சவத்திற்கான கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இத்துடன் இந்த வருடத்திற்கான பிரம்மோற்சவம் நிறைவடைகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.