மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சிவாஜி 100- படமா! பாடமா! (பாகம் 1)

பத்மஸ்ரீ விருது, வட இந்தியாவின் திரை ஜாம்பவான்களைத் தாண்டி கலைத் தூதராக அமெரிக்கா சென்றது எனப் பல தகவல்கள் ஒரு ரசிகருக்கான பொக்கிஷம்.

Published On :26 அக்டோபர் 2026, 7:31 pm IST

சிவாஜி 100- படமா! பாடமா! (பாகம் 1)- பாலசுப்ரமணியன் இராதாகிருஷ்ணன்; பக்.440; ரூ.415; வானதி பதிப்பகம், சென்னை-600 017. ✆ 044-2434 2810.

திரைத்துறை என்பது ஒரு மாயாஜால உலகம். அது வெளிச்சம்போட்டுக் காட்டும் நாயக பிம்பங்கள் மக்களின் மனதில் ஏற்படுத்தும் தாக்கம் வாழ்நாள் முழுவதும் இருக்கும். ஒரு ரசிக மனநிலை என்பது இப்படியெல்லாம் இருக்குமா என்று வியப்பளிக்கும் வகையில் இருக்கிறது நடிகர் திலகம் குறித்த இந்தப் புத்தகம்.

திரைப்படம் வெளியான ஆண்டு, முக்கியக் கதாபாத்திரங்கள், இசை, ஒளிப்பதிவு, வசனம், நடனம், பாடல்கள் என அனைத்துக் குறிப்புகளுடன் 'செவாலியே' சிவாஜி கணேசன் குறித்த ஓர் ஆவணமாக வெளிவந்திருக்கும் நூல் இது. மொத்தம் 50 திரைப்படங்களின் பட்டியல்; ஒவ்வொரு திரைப்படத்தின் கதையும், பாடல்கள்வரும் காட்சிகளும், அதன் சிறப்புகளும் குறித்து சுருக்கமாகவும் ,தெளிவாகவும் அலசுகிறார் நூலாசிரியர்.

பராசக்தி திரைப்படத்துக்குப் பிறகுதான் தமிழ்த் திரைப்படங்களில் பாடல்கள் குறைந்தது, கவியரசருக்கும் நடிகர் திலகத்துக்குமான கருத்து வேறுபாடு, 1962 கெய்ரோ திரைப்பட விழாவில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு விருது, குறைந்த வயதில்

பத்மஸ்ரீ விருது, வட இந்தியாவின் திரை ஜாம்பவான்களைத் தாண்டி கலைத் தூதராக அமெரிக்கா சென்றது எனப் பல தகவல்கள் ஒரு ரசிகருக்கான பொக்கிஷம்.

'கவியரசர்' என்று ஒற்றை வார்த்தையைவிட வலுவான வார்த்தை 'ஞானி'. அந்த ஞானி, நடிகர் திலகத்தின் படத்தில் புகுத்தியது பாடம் அல்ல, ஞானம் என்றுதான் சொல்ல வேண்டும். இந்தத் தொகுப்பை வாசித்தால் அது புரியும்.

ஒவ்வொரு திரைப்படங்கள் குறித்து கொடுத்திருக்கும் தகவல்களைவிட ஒளிக்கீற்றாய் வெட்டுவது பக்கங்களில் இடம்பெற்றிருக்கும் அந்தந்த திரைப்படங்களின் சுவரொட்டிகளும், சிவாஜியின் தோற்றங்களும். நூலாசிரியரின் உழைப்பில் தெரிகிறது சிவாஜி மீதான அவரின் காதல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.