கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

என்னை நான் பார்க்கிறேன்

'என்னை நான் பார்க்கிறேன்' அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். இது போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு நிச்சயம் தன்னம்பிக்கை அளிக்கும்.

Published On :19 அக்டோபர் 2026, 3:16 pm IST

என்னை நான் பார்க்கிறேன்-ஜி. இராமகிருஷ்ணன், இ.ஆ.ப. (ஓ); பக். 377; ரூ. 300; சந்தியா பதிப்பகம், சென்னை-600 083, ✆ 044-2489 6979.

நூலாசிரியர் தனது வாழ்க்கைக் குறிப்பை எந்தவிதத்திலும் மிகைப்படுத்தி கூறாமல் இயல்பாக எடுத்துரைத்துள்ளார். குறிப்பாக, அவரது தாயைப் பற்றி குறிப்பிடும் போதும், தனது 9 வயதில் தாயை இழந்து அன்புக்காக ஏங்கியதை உருக்கமாக தெரிவித்துள்ளார்.

குக்கிராமத்தில் பிறந்து அரசுப் பணிக்குத் தேர்வாகி, மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றியது பெருமைக்குரிய விஷயமாகும். தன்னம்பிக்கையுடன் உழைத்தால் வெற்றி பெற முடியும் என்பதை ஜி. ராமகிருஷ்ணனின் வாழ்கை வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

இளநிலை வேலைவாய்ப்பு அலுவலராகப் பணியில் சேர்ந்து, பின்னர் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று துணை ஆட்சியராகப் பதவியேற்று, காஞ்சிபுரம் கோட்டாட்சியர், உணவு வழங்கல் துறையில் உதவி ஆணையர் என பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். இவர் தனது பணிக் காலத்தில் பல்வேறு இடர்ப்பாடுகளை சந்தித்த போதும், தான் பணியாற்றிய துறைகளில் ஏராளமான மாற்றங்களை செய்து வளர்ச்சி கண்டார்.

குறிப்பாக, 1984-இல் தமிழ்நாடு சிமென்ட் நிறுவனத்தில் மேலாளராகப் பணியில் சேர்ந்து நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு முன்னெடுப்புகளை கையாண்டு வெற்றி கண்டார். தென்னாற்காடு மாவட்ட (கடலூர்) ஆட்சியராகப் பணியாற்றிய காலத்தில் அங்குள்ள தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு 'சில்வர் பீச்' எனப் பெயரிட்டார். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே தற்போது நடத்தப்படும் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' போன்ற முகாம்களை நடத்தி கிராம மக்களின் குறைகளைத் தீர்க்க முயற்சி மேற்கொண்டுள்ளார்.

'என்னை நான் பார்க்கிறேன்' அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். இது போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு நிச்சயம் தன்னம்பிக்கை அளிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.