தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!எவரெஸ்ட் அடிவாரத்தில் இரு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 உயர்வுஇந்தியா கூட்டணி போராட்டத்தால் 2.5 லட்சம் கடைகள் அடைப்பு, ரூ. 11,000 கோடி இழப்புசில நிமிஷங்களிலேயே விற்றுத்தீர்ந்த தீபாவளி சிறப்பு ரயில் டிக்கெட்டுகள்!கடலூர் தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!மணிக்கு 120 கி.மீ. வேகம்... தீவிர புயலாக கரையைக் கடந்த முரசு!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கிளென் மேக்ஸ்வெல் ‘திடீர்’ ஓய்வு!முதல்வா் விஜய் இன்று பெருந்துறை வருகை!இரு மாதங்களில் அரிசி விலை குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பும்: அமைச்சா் காந்திராஜ்

இத்தாலியில் இருவாரம்

காமாக்கியோ, ராவண்ணா, போலாக்னா, மில்செட்டி, ரோம், பார்சிலோனா உள்ளிட்ட பல முக்கிய நகரங்களின் தொன்மை, வரலாற்று நிகழ்வுகள், தற்காலத்தில் அந்நகரங்களின் நிலை குறித்த தகவல்கள் பயனுள்ளவை.

Published On :2 நவம்பர் 2026, 7:31 pm IST

இத்தாலியில் இருவாரம்- முனைவர் இரா. மனோகரன்; பக்.280; ரூ.330; காவ்யா வெளியீடு, சென்னை-600 024. ✆ 044- 2372 6882.

பயணம் என்பது நல்ல பட்டறிவாகும், புதிய மனிதர்களை சந்திப்பது, புது இடங்களைப் பார்ப்பது, பலவிதமான அனுபவங்களைப் பெறுவது, பண்பாடு, கலாசாரங்களைப் பார்ப்பது என பல்வேறு வாழ்வியல் நடைமுறைகளை நேரில் கண்டறிந்து நமது பார்வையை மேலும் விரிவுபடுத்துவதாகும். அந்த வகையில், இந்த 'இத்தாலியில் இருவாரம்' பயணக் கட்டுரை அழகான அனுபவத்தை வழங்குவதாகும்.

தேனி மாவட்டம், சின்னமனூர் ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர் மனோகரன், தான் சார்ந்த சங்கத்தின் மூலம் நட்பு பரிமாற்றம் என்ற அடிப்படையில் நாடு கடந்த பயணத்தை மேற்கொண்டு, இத்தாலியில் ரோட்டரி நண்பர்களின் விருந்து உபசரிப்பு, பார்த்த இடங்கள், உணவு, உறைவிட அனுபங்கள், அந்நாட்டு வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை சுவாரஸ்யமாக தந்துள்ளார்.

காமாக்கியோ, ராவண்ணா, போலாக்னா, மில்செட்டி, ரோம், பார்சிலோனா உள்ளிட்ட பல முக்கிய நகரங்களின் தொன்மை, வரலாற்று நிகழ்வுகள், தற்காலத்தில் அந்நகரங்களின் நிலை குறித்த தகவல்கள் பயனுள்ளவை.

ஃபெராரி ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் கார் பந்தயத் திடலுடன் கூடிய அருங்காட்சியகத்தின் விவரங்கள், இத்தாலியில் புகழ்பெற்று விளங்கும் மார்பிள், டைல்ஸ் விற்பனையகங்கள், படகு இல்ல பயணம், இரட்டையர்களின் சந்திப்பு, வாடிகன் நகர பயண அனுபவங்கள் பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

சின்னமனூருக்கு வந்த இத்தாலி குழுவினருடனான தனது அனுபவங்கள், அவர்கள் சென்ற மேகமலை, சின்னமனூர் சிவாகாமியம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோயில், அங்குள்ள இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமையான சிவலிங்கம் என்ற தகவல், அங்குள்ள செப்பேட்டுப்புகழ், பாண்டிய மன்னர்கள் பற்றிய வரலாற்றுத் தரவுகள் என தேனி மாவட்டத்து சிறப்புகளையும் பதிவிட்டிருப்பது சிறப்பம்சம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.