எண்பது பேர் 80 கொலை- மா. அமரேசன்; பக். 154; ரூ. 200; அறம் பதிப்பகம், திருவண்ணாமலை-632 316, ✆ 91507 24997.
பண்ணை வீட்டில் அமர்ந்து ஜோதிடம் பார்த்து வரும் சொல்வேந்தன், வள்ளுவ மரபில் வந்தவர். படித்த இளைஞர். பணம் காசுக்கு ஆசைப்படாதவர்.
சொல்வேந்தனின் அப்பா குணவேந்தன் ஜோதிடம், சாஸ்திரம் இவை எல்லாம் பகுத்தறிவுக்கு ஒவ்வாத விஷயங்கள் என்று அவற்றை முற்றிலுமாக ஒதுக்கியவர். ஆரம்பப் பள்ளி ஆசிரியர். சொல்வேந்தனின் தந்தை வழி தாத்தா பரசுராமன் சிறந்த ஜோதிடர்.
ஒருநாள் சொல்வேந்தனிடம் ஜோதிடம் பார்க்க அழகான பணக்கார பெண் ஒருவர் வருகிறார். 'என் புருஷன் கிட்ட இருந்து விவாகரத்து கிடைக்குமா என்று பார்த்துச் சொல்லுங்க...' என்று கேட்கிறார்.
அந்தப் பெண்ணிடம், அவளது கணவர் இரண்டு மணி நேரத்துக்கு முன்பு கொல்லப்பட்டார் என்றும், சொத்துக்காக அவர் கொல்லப்பட்டிருக்கிறார் என்றும் அதிரடியாகச் சொல்கிறார் சொல்வேந்தன்.
இன்னொரு சம்பவத்தில், இரட்டைக் கொலை வழக்கில் சிறைபட்ட கைதி நிரபராதி என்றும், உண்மைக் குற்றவாளிகளில் காவல் துறையைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள் என்று கூறி, நேர்மையான காவல் ஆய்வாளரை திக்குமுக்காட வைக்கிறார். பின்னர், உண்மையான குற்றவாளிகளை அடையாளம் காட்டுகிறார்.
சொல்வேந்தனின் ஜோதிட அறிவு ஒரு பெரும் கொள்ளைக் கூட்டத்தின் கவனத்தை ஈர்க்கிறது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து சொல்ல, சொல்வேந்தனைக் கடத்தத் திட்டமிடுகிறது.
தனக்கு ஏற்பட இருக்கும் ஆபத்தை சொல்வேந்தன் உணர்ந்தாரா? உடைத்தெறிந்தாரா? அப்போது அவர் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன? என்பது இந்தப் புதினத்தில் விறுவிறுப்பாகச் சொல்லப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இரும்புக் கதவுகள் திறக்கப்படும் தருணம்

அருணகிரிநாதரின் திருப்புகழ் (மூலம் முழுவதும்)

ஸ்ரீமத் பாகவதம்

வரப்பெற்றோம் (08-05-2026)
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

