சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

அருணகிரிநாதரின் திருப்புகழ் (மூலம் முழுவதும்)

சந்த நயத்துடனும் பக்தி சிரத்தையுடனும் வாசிக்கும்போது திருப்புகழ் ஒரு ராஜ மந்திரம் என்பதை உணரலாம்.

News image
Updated On :8 ஜூன் 2026, 5:20 pm IST

அருணகிரிநாதரின் திருப்புகழ் (மூலம் முழுவதும்)- பக். 1072; ரூ. 700; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை- 600 049, ✆ 044- 2650 7131.

திருப்புகழ் என்பது சந்தக் கடல்; அதன் சிறப்பே அதன் சந்த நயம்தான். 'இந்த எளியேன் எப்படிப் பாடுவேன் எனக்கென்ன தெரியும்' என திருவண்ணாமலையில் அருணகிரிநாதர் மறுக்க, முருகனால் சந்தம் எடுத்துக்கொடுக்கப்பட்டு 'முத்தைத்திரு' என்று பாட ஆரம்பிக்கிறார். சந்தம் கடல்போல் அலையலையாய் வந்து விழ அதே நயத்துடன் சுமார் 1300-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடுகிறார்.

திருப்புகழின் நோக்கம் பக்தியை வளர்ப்பது மட்டுமல்ல, மனிதனின் மனத்தில் இருக்கும் மும்மலத்தை அகற்றி, அதிலிருந்து விடுபட வேண்டும் என்கிற நியதியை வலியுறுத்துவதாகவும் அமைந்துள்ளது. பாடல்கள் அனைத்தையும் அதன் ராக- தாள வகைகளுடன் பதிப்பித்திருப்பதில் இந்தத் தொகுப்பு முழுமை பெறுகிறது.

அறுபடை வீடுகளுக்கு மட்டுமல்லாது, தமிழகத்தின் பல ஊர்களிலும், இலங்கை கதிர்காமத்தில் இருக்கும் முருகப்பெருமானுக்கும் என 200-க்கும் மேற்பட்ட முருகன் திருக்கோயில்களுக்குச் சென்று அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியுள்ளார்.

கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், வேல் விருத்தம் என ஒட்டுமொத்த தொகுப்பாகவும் வந்திருக்கிறது இந்தத் திருப்புகழ். சந்த நயத்துடனும் பக்தி சிரத்தையுடனும் வாசிக்கும்போது திருப்புகழ் ஒரு ராஜ மந்திரம் என்பதை உணரலாம்.

அருணகிரிநாதரின் நாவில் 'ஓம்' என முருகர் எழுதியதும் அவர் பாடியதால், ஆங்கிலத்தில் உச்சரிப்பை வளப்படுத்தும் பயிற்சிக்கான 'டங்க் ட்விஸ்ட்டர்' போல், 'நாச் சுழற்சி பயிற்சி'-க்கு ஏற்றதாக திருப்புகழ் இருப்பதாகச் சொல்லும் முருகனடியார்களின் கூற்றை மறுப்பதற்கில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.