பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

இரும்புக் கதவுகள் திறக்கப்படும் தருணம்

இலக்கிய ஆர்வம் கொண்ட நூலாசிரியர் வார இதழ் ஒன்றில் எழுதிய 15 கட்டுரைகளை நூலாக்கியிருக்கிறார்.

News image
Updated On :8 ஜூன் 2026, 5:25 pm IST

இரும்புக் கதவுகள் திறக்கப்படும் தருணம்- இரா. மஞ்சுளா; பக். 132; ரூ. 200; ஸ்நேகா, சென்னை- 600 063, ✆ 98409 69757.

இலக்கிய ஆர்வம் கொண்ட நூலாசிரியர் வார இதழ் ஒன்றில் எழுதிய 15 கட்டுரைகளை நூலாக்கியிருக்கிறார்.

சங்க காலம் தொடங்கி, தற்காலம் வரையில் பெண்களின் நிலையை அவர்களின் உழைப்பை, அங்கீகாரத்தை, தன்னம்பிக்கையை புதிய கோணத்தில் நூலாசிரியர் அணுகி, சங்க இலக்கியப் பாடல்களை மேற்கொள் காட்டி ஒவ்வொரு கட்டுரையிலும் உரிய விளக்கங்களை அளிக்கிறார்.

'சும்மா இருப்பது சுகமா?', 'விடுதலையின் பாடல் பரவட்டும்', 'தங்கம் விற்கும் விலைக்கு', 'மீன் விற்ற காசு நாறாது!', 'இசைத் துறையில் பெண்களின் இதயத் துடிப்பு', 'சமூகத்தைப் பூக்க வைக்கும் மந்திரம்', 'வேர்கள் செய்யும் குடும்பப் பராமரிப்பு' என ஒவ்வொரு கட்டுரையின் தலைப்பைப் படிக்கும்போதே அவற்றைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் உருவாகிறது.

ஆணாதிக்க சமூகத்தில் பெண்களுக்கும் சமமான விடுதலை வேண்டும் என்றும், அது பொருளாதார முன்னேற்றத்தில் அடங்கியிருக்கிறது என்றும் நூலாசிரியர் கூறுகிறார். ஆண்களை மட்டுமே எதிர்பார்த்து வாழ்ந்த மகளிர் இன்று சம்பாத்தியத்தால் தற்சார்பு நிலையை எட்டி, குடும்பத்தைத் தாங்கும் தூண்களாகவும், திருமணத்துக்குப் பிறகும் தங்களது பெற்றோரைப் பாதுகாப்பதிலும், பொதுச்சேவையிலும் பல்வேறு துறைகளிலும் சாதனையாளர்களாக மின்னுகின்றனர் என்றும் அவர் விளக்குகிறார்.

பெண்கள் முன்னேற்றத்தை வலியுறுத்தும் வகையிலான இந்த நூல் மாணவிகள், வளரிளம் பெண்கள், குடும்பத் தலைவிகள் வாசித்தால் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற வேட்கையை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.