தமிழ்ப் பெருவெளியில் இசுலாமியப் பேரொளி-முனைவர் அ. நசீமா, கவிஞர் து. ஸ்ரீதேவி; பக். 152; ரூ. 200; மணிவாசகர் பதிப்பகம், சென்னை- 600 021, ✆ 93805 30884.
தமிழ் இலக்கிய வரலாற்றில் இஸ்லாமியர்கள் ஆற்றிய தனித்துவமான பங்களிப்பை 12 அத்தியாயங்களில் சுருக்கமாக ஆவணப்படுத்தும் நூல் இது. இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தின் ஆதி வேர் முதல் சமகாலப் போக்குகள் வரை ஒரு முழுமையான சித்திரத்தை வழங்க முயல்கிறது.
குறிப்பாக, முஸ்லிம்கள் பயன்படுத்திய அரபு - தமிழ் எனும் தனித்துவமான மொழி மரபு மற்றும் கி.பி. 12-ஆம் நூற்றாண்டின் பல்சந்தமாலை தொடங்கி சீறாப்புராணம், சிற்றிலக்கிய வகைமைகளான கிஸ்ஸா, படைப்போர், நூறுநாமா எனப் பல்வேறு தளங்களில் இஸ்லாமிய இலக்கியங்களின் வரலாறுகள், இஸ்லாமிய வாழ்வியல், சூபிகள் தத்துவங்கள் என பல்வேறு கருத்துகள் தமிழ் நிலத்தின் இயங்கியலோடு எவ்வாறு ஒன்றிணைந்தன என்பதை நூல் சிறப்பாக அறிமுகப்படுத்துகிறது.
பேராசிரியர் எம்.எம். உவைஸின் ஆய்வுப் போக்கின் தாக்கத்தில் உருவாகியிருக்கும் இந்நூல், தமிழிசை மற்றும் நாட்டுப்புற இலக்கியங்களில் முஸ்லிம்களின் பங்கையும், 20-ஆம் நூற்றாண்டின் தொடக்ககால பெண் எழுத்தாளர்களின் பங்களிப்பையும் பதிவு செய்துள்ளது.
நவீன கால ஆண்-பெண் இஸ்லாமிய எழுத்தாளர்களின் படைப்புகளையும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளையும் முழுமையாக உள்வாங்கத் தவறியிருந்தாலும், தமிழ் இலக்கியப் பரப்பில் இஸ்லாமியர்களின் இலக்கியப் பங்களிப்பை அறிந்துகொள்ள விரும்பும் ஆய்வாளர்களுக்கும் மாணவர்களுக்கும் சிறந்த வழிகாட்டி நூல்.
தமிழ் இலக்கியத் தடத்தில் இஸ்லாமியர்கள் விட்டுச்சென்ற சுவடுகளை அறிய விரும்புவோர் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய ஓர் அடிப்படை தரவு நூலாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு





