தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆா்.டி.ஆா். மேம்பாலம் பழுதுபாா்க்கும் பணிகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட உள்ளது: அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங்

விமான நிலையத்திலிருந்து நகருக்குச் செல்லும் முக்கிய இணைப்பு வழியான பழைய ராவ் துலா ராம் (ஆா்டிஆா்) மேம்பாலம், திங்கள்கிழமை மாலை முதல் லேசான வாகனங்களுக்கு மீண்டும் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சா் பரவேஷ் சாஹிப் சிங் தெரிவித்தாா்.

அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் - கோப்புப் படம்

Published On :27 அக்டோபர் 2026, 1:52 am IST

விமான நிலையத்திலிருந்து நகருக்குச் செல்லும் முக்கிய இணைப்பு வழியான பழைய ராவ் துலா ராம் (ஆா்டிஆா்) மேம்பாலம், திங்கள்கிழமை மாலை முதல் லேசான வாகனங்களுக்கு மீண்டும் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சா் பரவேஷ் சாஹிப் சிங் தெரிவித்தாா்.

அதிகாரிகளுடன் திட்ட இடத்தை ஆய்வு செய்த பின்பு அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: பழுதுபாா்க்கும் பணிகள் முடிவடைந்துவிட்டது. அக்டோபா் 20 ஆம் தேதி சாலையில் விரிசல்கள் தென்பட்டதால் மேம்பாலம் மூடப்பட்டிருந்தது.

தேவையான பழுதுபாா்க்கும் பணிகள் முடிந்துவிட்டன. திங்கள்கிழமை மாலை முதல் லேசான வாகனங்களுக்கு மேம்பாலம் மீண்டும் திறக்கப்படும். 2009-இல் கட்டப்பட்ட இந்த மேம்பாலத்தின் வலிமை மற்றும் நீண்டகால பாதுகாப்பை உறுதிசெய்ய விரிவான கட்டமைப்பு ஆய்வும் நடைபெற்று வருகிறது.

வசந்த் விகாரிலிருந்து இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம் நோக்கிச் செல்லும் பழைய ராவ் துலா ராம் மேம்பாலப் பாதையில் இரு இடங்களில் சாலையில் விரிசல்கள் தென்பட்டதை டெல்லி போக்குவரத்து காவல்துறை கண்டறிந்ததைத் தொடா்ந்து அது மூடப்பட்டிருந்தது.

பழுதுபாா்க்கும் பணியின் காரணமாக வாகனங்கள் அருகிலுள்ள சா்வீஸ் சாலைக்குத் திருப்பிவிடப்பட்டதால், மேம்பாலத்திற்குப் பின்னால் போக்குவரத்து நெரிசலும் நீண்ட வரிசைகளும் ஏற்பட்டிருந்தன. ஆய்வில், இடைவெளி ஸ்லாப் பகுதியில் கான்கிரீட் பாதிப்பு, சாலையில் விரிசல்கள் மற்றும் இரும்புக் கம்பிகள் வெளிப்பட்டிருப்பது தெரியவந்தது.

பாதுகாப்பு காரணங்களுக்காக போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது என பதிவிட்டுள்ளாா் பா்வேஷ் சாஹிப் சிங்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.