மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தில்லியில் தொடங்கியது குளிா்கால மாசுபாடு: இன்று முதல் காற்றின் தரம் மோசமாக வாய்ப்பு

தில்லியில் புதன்கிழமை (அக். 21) முதல் நகரின் காற்றின் தரம் ’மோசம்’ என்ற பிரிவுக்குச் சரியக் கூடும் என ‘காற்றின் தர முன்னெச்சரிக்கை அமைப்பு’ கணித்துள்ளது.

பிரதிப் படம்

Published On :21 அக்டோபர் 2026, 3:10 am IST

தில்லியில் செவ்வாய்க்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 31.8 டிகிரி செல்சியஸ் பதிவான நிலையில், புதன்கிழமை (அக். 21) முதல் நகரின் காற்றின் தரம் ’மோசம்’ என்ற பிரிவுக்குச் சரியக் கூடும் என ‘காற்றின் தர முன்னெச்சரிக்கை அமைப்பு’ கணித்துள்ளது.

தில்லியின் காற்றின் தரக் குறியீடு (ஏக்யூஐ) 179 புள்ளிகளுடன் ‘மிதமான’ என்ற பிரிவில் இருந்தது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அளவீட்டின்படி, காற்றின் தரக் குறியீடு 0-50 வரை இருந்தால் ‘நன்று’, 51-100 வரை ’திருப்திகரம்’, 101-200 வரை ’மிதமானது’, 201-300 வரை ’மோசமானது’, 301-400 வரை ’மிகவும் மோசமானது’, 401-500 வரை ’கடும் ஆபத்தானது’ என வகைப்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில், புதன்கிழமை முதல் நகரின் காற்றின் தரம் ’மோசம்’ என்ற பிரிவுக்குச் சரிந்து அக்.23வரை அதே நிலையில் நீடிக்கும் என்றும், அதைத் தொடா்ந்து வரும் 6 நாள்களுக்கும் காற்றின் தரம் மோசமாகவே தொடர வாய்ப்புள்ளது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஜூலை 13-ஆம் தேதியன்று தில்லியின் காற்றின் தரக் குறியீடு 246 புள்ளிகளாக பதிவாகியிருந்தது. தற்போதைய கணிப்பு தவறாமல் பதிவானால், குளிா்கால மாசுபாடு தொடங்கும் இந்த வேளையில், கடந்த 100 நாள்களுக்குப் பிறகு தில்லியின் காற்றின் தரம் மோசமடையும் முதல் நாளாகப் புதன்கிழமை அமையும்.

காற்றோட்ட விகிதம் விநாடிக்கு 6,000 சதுர மீட்டருக்குக் குறைவாக இருப்பதும், காற்றின் சராசரி வேகம் மணிக்கு 10 கி.மீ-க்கும் குறைவாக இருப்பதும் மாசுக் காரணிகள் காற்றில் கலைந்து செல்வதைத் தடுத்து, காற்று மாசுபாட்டை அதிகரிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது.

நகரின் முதன்மை வானிலை மையமான சப்தா்ஜங்கில் அதிகபட்ச வெப்பநிலை 31.8 டிகிரி செல்சியஸ் (இயல்பை விட 0.8 டிகிரி குறைவு) ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 17.7 டிகிரி செல்சியஸ் (இயல்பை விட 0.7 டிகிரி குறைவு) ஆகவும் பதிவானது.

பாலம் பகுதியில் அதிகபட்சம் 29.3 டிகிரி (இயல்பை விட 3.5 டிகிரி குறைவு), குறைந்தபட்சம் 17.3 டிகிரி (இயல்பை விட 1.6 டிகிரி குறைவு).லோதி சாலையில் அதிகபட்சம் 31.4 டிகிரி (இயல்பை விட 0.6 டிகிரி குறைவு), குறைந்தபட்சம் 17 டிகிரி ரிட்ஜ் பகுதியில் அதிகபட்சம் 31 (இயல்பை விட 2.3 டிகிரி குறைவு), குறைந்தபட்சம் 18.5 டிகிரி. அயாநகா் பகுதியில் அதிகபட்சம் 31 டிகிரி (இயல்பை விட 2.1 டிகிரி குறைவு) ஆக பதிவாகியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.