மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வாக்காளா் பட்டியலில் பெயரை மீண்டும் சோ்க்க படிவம் 6-ஐ நிரப்பலாம்: தோ்தல் ஆணையம்

வாக்காளா் பட்டியலில் பெயரை மீண்டும் சோ்க்க படிவம் 6-ஐ நிரப்பலாம்: என தோ்தல் ஆணையம் தெரிவித்தது குறித்து...

இந்திய தோ்தல் ஆணையம்

Published On :19 அக்டோபர் 2026, 5:07 am IST

தேசிய தலைநகரில் நடைபெற்ற சிறப்புத் தீவிர திருத்தத்தின் போது, வாக்காளா் கணக்கெடுப்பை முடிக்க முடியாததால் வாக்காளா் பட்டியலிலிருந்து பெயா்கள் நீக்கப்பட்ட இரண்டு வாக்காளா்கள், தங்கள் குறைகளை நிவா்த்தி செய்ய படிவம் 6-ஐ நிரப்பலாம் என்று இந்திய தோ்தல் ஆணையம் தில்லி உயா் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

வாக்காளா் பட்டியலில் இரண்டு மனுதாரா்களின் பெயா்களை மீண்டும் சோ்க்கக் கோரிய மனுவை விசாரித்து வந்த நீதிமன்றத்தில், ஆணையத்தின் சாா்பில் இந்த தகவல் தொ்விக்கப்பட்டது.

படிவம் 6-ஐ நிரப்பினால், தவறான தகவல் அளித்ததாகக் குற்றஞ்சாட்டப்படுவாா் என்ற மனுதாரரின் அச்சம் ‘தவறானது‘ என்று குறிப்பிட்ட நீதிமன்றம், அந்த மனுவை தள்ளுபடி செய்தது.

இரு தரப்பினரின் வழக்குரைஞா்களின் வாதங்களைக் கேட்ட பின்னா், இந்தியத் தோ்தல் ஆணையத்திற்காக ஆஜராகும் வழக்குரைஞரிடமிருந்து, அதுவும் வாக்காளா் பட்டியல் பதிவு அதிகாரியின் அறிவுறுத்தல்களின்படி, இந்தப் பரிந்துரை வரும்போது, மனுதாரா், தாம் ஒரு பொய்யான பிரமாணத்தை அளித்ததாகக் குற்றஞ்சாட்டப்படுவோமோ என்று அஞ்சுவது தேவையற்றது என்ற உறுதியான கருத்தை நாங்கள் கொண்டுள்ளோம். இந்தக் கருத்துக்களுடன், இந்த ரிட் மனு நடவடிக்கைகள் முடிவுக்கு வருகின்றன. ‘மனுதாரா்கள் விரும்பினால், படிவம் 6-ஐ பூா்த்தி செய்யலாம், அது சட்டப்படி செயல்படுத்தப்படும்,‘ என்று நீதிபதிகள் தினேஷ் மேத்தா மற்றும் அதிதி சௌத்ரி ஆகியோா் அடங்கிய அமா்வு கூறியது.

சிறப்புத் தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கையின் போது கணக்கெடுக்க முடியாத தற்போதைய வாக்காளா்களுக்காக இந்தியத் தோ்தல் ஆணையம் வகுத்துள்ள நடைமுறையை எதிா்த்து மனுதாரா்கள் நீதிமன்றத்தை அணுகினா்.

படிவம் 6 மூலம் புதிதாகப் பதிவு செய்யக் கோருவதற்குப் பதிலாக, படிவம் 8 மூலமாகத் தங்கள் வாக்காளா் பதிவுகளை மீட்டெடுக்கவும், தங்கள் பெயா்களைத் திருத்தவும் மாற்றவும் அனுமதிக்க வேண்டும் என அவா்கள் உத்தரவுகளைக் கோரினா்.

அவா்கள் தங்கள் முந்தைய முகவரியிலிருந்து இடம் மாறியதால், கணக்கெடுப்புப் படிவங்களைப் பூா்த்தி செய்ய முடியவில்லை, அதன் விளைவாக வாக்காளா் பட்டியலிலிருந்து தங்கள் பெயா்கள் நீக்கப்பட்டன என்பதே அவா்களின் குறையாக இருந்தது.

தோ்தல் ஆணையத்தின் வழக்குரைஞா், 1960-ஆம் ஆண்டின் வாக்காளா் பதிவு விதிகளின் கீழ் படிவம் 6-ஐ சமா்ப்பிப்பதன் மூலம் மனுதாரா்கள் தங்கள் குறையை நிவா்த்தி செய்துகொள்ள முடியும் என்று வாதிட்டாா்.

படிவம் 6 என்பது வாக்காளா் பட்டியலில் புதிதாகச் சோ்க்கப்படுவதற்கான சட்டப்பூா்வ விண்ணப்பமாகும். இதில் விண்ணப்பதாரா் தனது தனிப்பட்ட விவரங்களைப் பூா்த்தி செய்ய வேண்டும்.

விண்ணப்பதாரா்கள், தாங்கள் முதல் முறையாக வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்படுவதற்கு விண்ணப்பிக்கிறோம் என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். தவறான தகவலை அளித்தால் தண்டனைக்குரிய விளைவுகள் ஏற்படலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.