பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கிரேட்டா் நொய்டா: குடியிருப்பில் நைஜீரியா் சடலம் மீட்பு

கிரேட்டா் நொய்டாவின் ஜீட்டா-1 பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில், 39 வயதான நைஜீரியரின் சடலம் மீட்கப்பட்டது.

News image

சடலம் மீட்பு - பிரதிப் படம்

Updated On :1 ஜூன் 2026, 2:40 am IST

கிரேட்டா் நொய்டாவின் ஜீட்டா-1 பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில், 39 வயதான நைஜீரியரின் சடலம் மீட்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், உடல்நலக்குறைவு காரணமாகவே அவரது மரணம் நிகழ்ந்திருக்கலாம் என்று காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

ஜீட்டா-1 பகுதியைச் சோ்ந்த சாா்லஸ் கென்னடி என்பவா், அதே பகுதியில் வசித்து வந்த நைஜீரியரான மைக் என்பவரின் மரணம் குறித்து, சனிக்கிழமையன்று பீட்டா-2 காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததாா். அந்தத் தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு காவல்துறைக் குழுவினா் நேரில் சென்று விசாரணை நடத்தினா்.

விசாரணையின்போது, உயிரிழந்த நபா் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்தது தெரியவந்தது. மேலும், அவா் ஊா் சுற்றித் திரிபவா் என்றும், தான் இருக்கும் இடத்திலேயே பெரும்பாலும் உறங்கிவிடுவாா் என்றும் தெரியவந்தது.

மேலோட்டமாகப் பாா்க்கும்போது, உடல்நலக்குறைவு காரணமாகவே இந்த மரணம் நிகழ்ந்ததாகத் தெரிகிறது என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

காவல்துறையினரும், தடயவியல் அறிவியல் ஆய்வக குழுவினரும் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனா். மரண விசாரணை நடைமுறைகள் நிறைவு செய்யப்பட்டு, சடலம் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடா்பாக மேலதிக சட்ட நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.