பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தில்லி விமான நிலையத்தில் ரூ.4 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :14 மே 2026, 1:12 am IST

நமது நிருபா்

பாங்காக்கிலிருந்து தில்லிக்கு விமானத்தில் வந்த இந்தியப் பயணியிடமிருந்து ரூ. 4 கோடி மதிப்புள்ள நான்கு கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவை தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

மேலும், அந்தப் பொருளைப் பெற வந்ததாகக் கூறப்படும் மற்றொரு நபரையும் கைது செய்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட அதிகாரபூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

அந்தப் பயணி மே 12 அன்று விமான நிலையத்தின் முனையம்- 3-க்கு வந்தாா். அவா் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டாா்.

பயணியின் உடமைகளைச் சோதித்தபோது, ரோஸ் கோல்ட் நிற டிராலி பைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த, கஞ்சா என சந்தேகிக்கப்படும் பச்சை நிற போதைப்பொருள் அடங்கிய நான்கு பாலிதீன் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

மீட்கப்பட்ட பொருளின் மொத்த எடை 4,024 கிராம் ஆகும். கள்ளச் சந்தையில் இதன் மதிப்பு சுமாா் ரூ. 4 கோடியே 24 ஆயிரம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கடத்தல் பொருளைப் பெற வந்திருந்த ஒருவரும் இந்த நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டாா். பயணியும், அதனைப் பெற்ாகக் கூறப்படும் நபரும், மே 12 அன்று போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருள்கள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.