பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கோத்தகிரியில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

News image

சித்திரிப்பு

Updated On :8 ஜூன் 2026, 1:21 am IST

கோத்தகிரியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் இருவரைக் கைது செய்தனா்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் காரில் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கோத்தகிரி உதவி ஆய்வாளா் பிரசாந்த், காவலா்கள் வாகனத் தணிக்கையில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது, பஜாா் பகுதியில் வந்த காரில் இருந்து 345 புகையிலை பாக்கெட்டுகள், 7 கிலோ குட்கா ஆகியன கைப்பற்றப்பட்டன. இது தொடா்பாக கன்னிகாதேவி காலனியை சோ்ந்த பெருமாள் (33), விசாவு (33) ஆகிய இருவரையும் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.