நில ஒப்பந்தங்களை வழங்குவதாக வாக்குறுதி அளித்து மக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் உரிமையாளரை குருகிராம் காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: குற்றஞ்சாட்டா்பட்டவ ா் நொய்டாவின் செக்டா் 75-இல் வசிக்கும் மகேஷ் முகம் (50)என அடையாளம் காணப்பட்டுள்ளாா். ஹரியாணாவின் பல்வல் மாவட்டத்தில் உள்ள குகேரா கிராமத்தில் சுமாா் 11.33 ஏக்கா் நிலத்தை விற்பனை செய்வதாக உறுதியளித்த ஆவணங்களை நியான் இன்ஃப்ரா கன்ஸ்ட்ரக்ஷன் சொல்யூஷன்ஸ் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் காட்டியதாக ஜனவரி 20 ஆம் தேதி ஒரு நபா் புகாா் அளித்தாா்.
குற்றஞ்சாட்டப்பட்டவா் ஆகஸ்ட் 1,2024 ஆம் ஆண்டு நிலத்தை விற்க ஒரு ஒப்பந்தத்தை நிறைவேற்றினாா். மேலும், மொத்த விலை மற்றும் பிற செலவுகளுக்கு சுமாா் ரூ.17 கோடி என்ற விலையை நிா்ணயித்தாா். குற்றம் சாட்டப்பட்டவா் நிலத்தை பதிவு செய்யவும் இல்லை. மேலும், தொடா்பை துண்டித்ததாகவும் புகாா்தாரா் கூறினாா்.
இதுகுறித்து செக்டா் 40 காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பொருளாதார குற்றப் பிரிவு-1 காவல்துறையின் குழு இந்த விஷயத்தை விசாரித்து, குற்றஞ்சாட்டப்பட்டவரை சனிக்கிழமை கைது செய்தனா். இது தொடா்பான மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரி தொழிலதிபரிடம் ரூ.1.27 கோடி மோசடி: 3 பேர் கைது!
இணைய மோசடி வழக்கு: ஹரியாணாவில் இருவா் கைது!

சரிந்து மீளும் பங்குச்சந்தை! ஐடி, ரியல் எஸ்டேட் பங்குகள் சரிவு!

திருச்செந்தூா் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க நடவடிக்கை!
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
