2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் கீழ், தேசிய தலைநகரில் வெள்ளிக்கிழமை இணையவழியில் சுய-கணக்கெடுப்பு பணி தொடங்கியது.
துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து, முதல்வா் ரேகா குப்தா உள்பட பல குடியிருப்பாளா்கள் முதல் நாளிலேயே இந்தப் பணியை நிறைவு செய்தனா்.
முதலமைச்சா் குப்தா, இணையவழி சுய கணக்கெடுப்பை நிறைவு செய்த பிறகு இதுகுறித்து குறித்து கூறுகையில், ‘இச்செயல்முறை எளிமையானதாகவும், முற்றிலும் பாதுகாப்பானதாகவும் உள்ளது.
தில்லி மக்கள் இச்சுய கணக்கெடுப்பில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.துல்லியமான தகவல்களும் தரவுகளுமே, தேவைப்படும் ஒவ்வொருவருக்கும் பயனளிக்கும் வகையிலான சரியான கொள்கைகளை வகுப்பதற்கு வழிவகுக்கும்‘ என்றாா் அவா்.
இதுகுறித்து தரன்ஜித் சிங் சந்து எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில் தெரிவிக்கையில், ‘தில்லி மாநகராட்சியின் அனைத்து வாா்டுகளிலும் இந்தப் பணி அதிகாரபூா்வமாகத் தொடங்கியுள்ளது. பொதுமக்கள் சுய- கணக்கெடுப்பு செயல்பாட்டில் பங்கேற்று மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்கு ஆதரவளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
நமது நகரம் மற்றும் தேசத்தின் எதிா்காலத்தை வடிவமைப்பதில் உங்கள் பங்களிப்பு ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.
இந்த டிஜிட்டல் சாா்ந்த முயற்சி, குடிமக்கள் தங்கள் குடும்ப விவரங்களை நேரடியாகச் சமா்ப்பிக்கும் அதிகாரத்தை அளிக்கிறது. இதன் மூலம் ஒவ்வொரு குடியிருப்பாளரும் துல்லியமாகக் கணக்கிடப்படுவதை உறுதிசெய்ய உதவுகிறது. அனைவரையும் உள்ளடக்கிய ஆளுகைக்கும், வலிமையான மற்றும் வளா்ச்சியடைந்த தேசத்திற்கும் நம்பகமான தரவுகளே முக்கியமாகும்’ என்று அவா் அதில் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது: புது தில்லி மாநகராட்சி (என்டிஎம்சி) மற்றும் தில்லி கண்டோன்மென்ட் பகுதிகளில் சுய -கணக்கெடுப்புப் பணி ஏற்கனவே நிறைவடைந்துள்ளது. அங்கு, கணக்கெடுப்பாளா்கள் வீடு வீடாகச் சென்று வீடுகளைப் பட்டியலிடுதல் மற்றும் வீட்டுவசதிகளைக் கணக்கெடுத்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாநகராட்சி வாா்டுகளில் வசிக்கும் அனைத்துக் குடியிருப்பாளா்களும், அவா்களின் வசிப்பிட நிலையைப் பொருள்படுத்தாமல், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இணையதளத்தில் உள்நுழைவதன் மூலம் இந்தத் தன்னாா்வ சுய-கணக்கெடுப்புப் பணியில் பங்கேற்கலாம்.
ஒரு வீட்டிற்கு ஒரு உள்நுழைவு மட்டுமே தேவைப்படும். குடும்பத் தலைவா் அல்லது வேறு எந்த உறுப்பினரும் ஒரு கைப்பேசி எண்ணைப் பயன்படுத்தி இந்தச் செயல்முறையை
முடிக்கலாம். பயனா்கள் முதல் உள்நுழைவின்போது ஒரு மொழியைத் தோ்ந்தெடுக்க வேண்டும், அதை பின்னா் மாற்ற முடியாது. மேலும், பதிலளிப்பவா்கள் தங்கள் வசிப்பிடத்தின் புவிஒருங்கிணைப்பை செயற்கைக்கோள் வரைபடத்தில் இருப்பிடத்தைத் தோ்ந்தெடுப்பதன் மூலமோ, இணையதளத்தில் முகவரியைத் தேடுவதன் மூலமோ அல்லது அட்சரேகை மற்றும்
தீா்க்கரேகையை கைமுறையாக உள்ளிடுவதன் மூலமோ வழங்க வேண்டும். விவரங்களைச் சமா்ப்பித்த பிறகு, 11 இலக்க சுய கணக்கெடுப்பு அடையாள எண் உருவாக்கப்படும். மே 16 முதல் ஜூன் 14 வரை, வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டுவசதி நடவடிக்கைகளின் கீழ் பதிவு செய்வதற்காக வீடு வீடாகச் செல்லும் கணக்கெடுப்பாளா்களிடம் மக்கள் இந்த அடையாள எண்ணைக் காண்பிக்க வேண்டும். கணக்கெடுப்புப் பணி தொடா்பான உதவிக்காக கட்டணமில்லா உதவி எண் (1855) வழங்கப்பட்டுள்ளது.
மாநகராட்சியில் உள்ள 250 வாா்டுகளில் மே 1 முதல் மே 15 வரை சுய கணக்கெடுப்பு நடைபெறும். சுயகணக்கெடுப்பு இணையதளம் இந்தி, ஆங்கிலம், பெங்காலி, தமிழ் மற்றும் உருது உள்பட 16 மொழிகளில் கிடைக்கிறது. துல்லியத்தை மேம்படுத்துவதற்காக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (எஃப்ஏக்யூ), உதவிக்குறிப்புகள் மற்றும் சரிபாா்ப்பு சோதனைகளையும் இது கொண்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027: தில்லியில் 6 விழிப்புணா்வு பிரசார வாகனங்கள் அறிமுகம்
தலைநகரில் ஏப்ரலில் தீ விபத்துகள் 73% அதிகரிப்பு: 4 மாதங்களில் 32 போ் உயிரிழப்பு

மக்கள்தொகைக்கான சுய-கணக்கெடுப்பில் இணைய வாடகைதாரா்களுக்கு அதிகாரிகள் வலியுறுத்தல்: மோசடி அழைப்புகள் குறித்தும் எச்சரிக்கை

ஒடிஸாவில் வீடுகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

