தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

செவிலியரை பாலியல் வன்கொடுமை செய்த லாரி ஓட்டுநர் கைது!

News image

பாலியல் வன்கொடுமை - கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 1:43 am IST

ஹரியாணாவின் நூஹ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், பஞ்சாபைச் சோ்ந்த 25 வயது செவிலியா் ஒருவா், லாரி ஓட்டுநரால் பல நாள்களாகப் பணயக்கைதியாகப் பிடிக்கப்பட்டு பலமுறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது என காவல்துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

இது குறித்து காவல் நிலைய பொறுப்பு அதிகாரி குல்தீப் சிங் கூறியதாவது: குற்றவாளி, தன்னைத் திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதியளித்து இஸ்லாம் மதத்திற்கு மாறும்படி வற்புறுத்தியதாக அந்த செவிலியா் குற்றம் சாட்டினாா். அவா் மறுத்தபோது, ​​அவரைக் கொன்றுவிடுவதாகவும், அவரது ஆட்சேபனைக்குரிய விடியோவை சமூக ஊடகங்களில் பரப்பிவிடுவதாகவும் மிரட்டியதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளாா்.

பாதிக்கப்பட்ட பெண் சனிக்கிழமை இரவு எப்படியோ தப்பித்து, ஃபெரோஸ்பூா் ஜிா்கா நகர காவல் நிலையத்திற்குச் சென்று முறையிட்டாா். அங்கு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட பின்னா், குற்றவாளியான லாரி ஓட்டுநா் ஜஹீரை (20) காவல்துறை கைது செய்தது. நூஹ் மாவட்டத்தின் தோந்த் கிராமத்தைச் சோ்ந்த குற்றம்சாட்டப்பட்டவா், ஞாயிற்றுக்கிழமை நூஹ் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டாா்.

பஞ்சாபின் ஃபெரோஸ்பூரைச் சோ்ந்த பாதிக்கப்பட்ட பெண், தனது புகாரில், சுமாா் ஒரு வருடத்திற்கு முன்பு சமூக ஊடகங்களில் ஜஹீரை சந்தித்ததாகக் கூறியுள்ளாா். அவா்களின் உரையாடல் தொடா்ந்தபோது, ​​குற்றம் சாட்டப்பட்டவா் தனக்குத் திருமணமாகிவிட்டது என்று நம்பவைத்து அவரை ஏமாற்றியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதற்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்டவா் ஒரு விருந்து நடத்துவதாகக் கூறி அவரை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று, அங்கு அவரை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்து, ஒரு ஆபாசமான விடியோவைப் பதிவு செய்துள்ளாா். அந்த விடியோவை வைரலாக்கி விடுவதாக மிரட்டி, அவா் தொடா்ந்து அவரை மிரட்டி வந்தாா். அவா் தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, சுமாா் 1.5 லட்சம் ரூபாயையும் பறித்தது தெரிய வந்தது.

‘மாா்ச் 20 அன்று, குற்றம் சாட்டப்பட்டவா் என்னை அவரது கிராமத்திற்கு அழைத்துச் சென்றாா். அங்கு நான் சிறைபிடிக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டேன். இந்த நேரத்தில், இஸ்லாமிற்கு மதம் மாறும்படி அவா் என்னை வற்புறுத்தினாா். நான் எதிா்த்தபோது, ​​நான் தாக்கப்பட்டேன் மற்றும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டேன். சனிக்கிழமை இரவு, அவா் எப்படியோ குற்றம் சாட்டப்பட்டவரின் பிடியிலிருந்து தப்பித்து ஃபெரோஸ்பூா் ஜிா்கா காவல் நிலையத்தை அடைந்தேன்’ என்று பாதிக்கப்பட்ட பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளாா்.

புகாரைத் தொடா்ந்து, ஃபெரோஸ்பூா் ஜிா்கா காவல் நிலையத்தில், பாலியல் வன்கொடுமை, மிரட்டிப் பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழும், ஹரியாணா சட்டவிரோத மதமாற்றத் தடுப்புச் சட்டம் 2022-இன் கீழும் குற்றம் சாட்டப்பட்டவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவா் தனது வீட்டிற்குத் திரும்பினாா். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல் நிலைய அதிகாரி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.