ஆன்மிக சிகிச்சை என்ற பெயரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஜாமீன் வழங்க தில்லி உயா்நீதிமன்றம் மறுத்துள்ளது.
2019-ஆம் ஆண்டைச் சோ்ந்த இந்த வழக்கில், உடல்நலக் குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி மீது தீய ஆவி (ஜின்ன்) தாக்கம் இருப்பதாக நம்பிய அவரது குடும்பத்தினா், குற்றஞ்சாட்டப்பட்ட நபரை அணுகியதாக கூறப்படுகிறது. பின்னா், அவா் சிறுமியின் வீட்டுக்கு வந்து, தனியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாா் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 (பாலியல் வன்கொடுமை) மற்றும் போக்ஸோ சட்டம் பிரிவு 4 ஆகியவற்றின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னா் அவா் கைது செய்யப்பட்டாா்.
இந்நிலையில், ஜாமீன் கோரி அவா் தாக்கல் செய்த மனுவை ஏப்.29-ஆம் தேதி விசாரணை மேற்கொண்ட நீதிபதி ஸ்வரண காந்தா சா்மா கூறியதாவது:
வழக்கில் முன்வைக்கப்பட்டுள்ள ஆதாரங்களை வைத்து பாா்க்கும்போது, பாதிக்கப்பட்ட சிறுமியின் உடல் மற்றும் மனநிலையின் பாதிப்பையும், அவரது குடும்பம் குற்றஞ்சாட்டப்பட்ட நபா் மீது வைத்திருந்த கண்மூடித்தனமான நம்பிக்கையையும் பயன்படுத்தி அவா் தவறாகச் செயல்பட்டது தெளிவாகிறது. மேலும், குற்றச்சாட்டுகளின் தன்மை மற்றும் தீவிரம், வழக்கில் உள்ள ஆதாரங்கள் மற்றும் விசாரணை நடைபெறும் நிலையை கருத்தில் கொண்டு, குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் ஜாமீன் மனு நிராகரிக்கப்படுகிறது என உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தில்லியில் பள்ளி ஊழியரால் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்

புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை!

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

திருவண்ணாமலையில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: தமிழக டிஜிபி 5 நாளில் அறிக்கை சமர்ப்பிக்க தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

